வீட்டு காவலுக்கு பின் முதன்முறையாக வெளியே வந்த ஜனாதிபதி
ஜிம்பாப்வேயை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வருபவர் ராபர்ட் முகாபே.
இந்நிலையில் துணை ஜனாதிபதியான எம்மர்சன் நங்கக்வாவை பதவி நீக்கம் செய்யவே பிரச்சனை வெடித்தது.
இதனை தொடர்ந்து அந்நாட்டு ராணுவம் நேற்று முன்தினம் நாட்டை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் ஜனாதிபதி ராபர்ட் முகாபேவை வீட்டுக் காவலில் வைத்தனர்.
இதனையடுத்து ராணுவ தரப்புக்கும், ஜனாதிபதி தரப்புக்கும் தொடர் பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், இன்று பொதுநிகழ்ச்சியில் ஒன்று கலந்து கொண்டிடுள்ளார்.
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் தீர்வு கிடைக்கும் என ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு காவலுக்கு பின் முதன்முறையாக வெளியே வந்த ஜனாதிபதி
Reviewed by Author
on
November 17, 2017
Rating:

No comments:
Post a Comment