பூமியில் மனிதர்கள் தோன்றியதற்கு இந்நிகழ்வு தான் காரணம்: விஞ்ஞானிகள் புதிய தகவல் -
பூமி மீது எரிக்கல் விழுந்து டைனோசர்கள் முற்றிலுமாக அழிந்ததால் தான் மனிதர்கள் தோன்றியதற்கு முக்கிய காரணம் என விஞ்ஞானிகள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த Kunio Kaiho மற்றும் Naga Oshima என்ற இரண்டு விஞ்ஞானிகளின் தலைமையிலான குழுதான் இப்பரப்பரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.
விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவலில் மனிதர்கள் தோன்றியதற்கான காரணத்தை விரிவாக குறிப்பிட்டுள்ளனர்.
அதில், சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எரிக்கல் ஒன்று பூமி மீது பயங்கரமாக மோதியது. தற்போதுள்ள மெக்ஸிகோ நாட்டு பகுதியில் தான் அந்த எரிக்கல் விழுந்துள்ளது. சுமார் 10 கி.மீ அகலம் உள்ள அந்த எரிக்கல் பூமி மீது மோதியதன் விளைவாக சுமார் 176 கி.மீ அகலம் பெரும் பள்ளம் ஏற்பட்டது. கற்பனையில் எண்ண முடியாத அளவிற்கு பூமி மீது மோதியதால் சுமார் 1 பில்லியன் அணு குண்டுகள் வெடித்து வெளியிட்டதை விட அதிகளவிலான சக்தி வெளியானது.
இதன் விளைவாக, ஆகாயத்தில் குப்பை, தூசுகள் மற்றும் கரும்புகை நிரம்பி சுமார் 80 சதவிகித சூரிய வெளிச்சம் பூமியில் படாமல் மறைக்கப்பட்டது. அதாவது, சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக சூரிய ஒளி இல்லாமல் பூமி தத்தளித்து வந்துள்ளது. எரிக்கல் தாக்கியதில் வெளியான முக்கிய விபரீதங்களில் கரும்புகையும் ஒன்று. இந்த கரும்புகை தான் டைனோசர்களையும் தரை மற்றும் கடலில் வாழ்ந்த பிற 75 சதவிகித உயிரினங்களையும் முற்றிலுமாக அழித்துள்ளது.
டைனோசர்களை அழித்த கரும்புகை அதிகளவில் தோன்றியதற்கு மற்றொரு காரணத்தையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் உள்ள பாறைகளில் கரும்புகையை உற்பத்தி செய்யும் ஹைட்ரோகார்பன் ஒரு சில பகுதிகளில் மட்டுமே அதிகமாக காணப்படுகிறது. அதாவது, ஹைட்ரோகார்பன் நிரம்பிய பாறைகள் ஒட்டுமொத்த பூமியில் 13 சதவிகித பகுதியில் மட்டுமே அதிகளவில் உள்ளது. இந்த 13 சதவிகித பகுதியில் தான் டைனோசர்கள் வசித்து
வந்துள்ளன.</p><p>குறிப்பிட்ட இப்பகுதி மீது எரிக்கல் விழுந்த காரணத்தினால் தான் கற்பனையில் எண்ண முடியாத அளவிற்கு கரும்புகை ஏற்பட்டு டைனோசர்கள் அழிந்தன. ஒருவேளை, இந்த 13 சதவிகித பகுதியை தவிர்த்து பூமியின் பிற 87 சதவிகித பகுதியில் அந்த எரிக்கல் விழுந்திருந்தால் பூமியில் டைனோசர்கள் இன்றளவும் வாழ்ந்திருக்க வாய்ப்புள்ளது.
இதன் விளைவாக மனிதர்கள் தோன்றிருக்க வாய்ப்பில்லை அல்லது மனிதர்கள் தோன்ற பல மில்லியன் ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டுருக்கலாம். அதாவது, பூமியை தாக்கிய அந்த எரிக்கல் 20 வினாடிகள் தாமதமாக அல்லது முன்கூட்டியே விழுந்திருந்தால் அது வேறு பகுதியில் விழுந்திருக்கும் என்றும் பூமியில் மனிதர்கள் தோன்ற வாய்ப்பில்லை எனவும் ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியில் மனிதர்கள் தோன்றியதற்கு இந்நிகழ்வு தான் காரணம்: விஞ்ஞானிகள் புதிய தகவல் -
Reviewed by Author
on
November 11, 2017
Rating:

No comments:
Post a Comment