ஊழல் அற்ற பொது அமைப்பை முன்னிறுத்துவது பற்றி சிந்தியுங்கள்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆரவாரங் கள் புத்துருவாகியுள்ளன. கூடவே அரசியல மைப்புச் சீர்திருத்தத்தின் இடைக்கால வரைபும் வெளியாகி அதன் மீதான விவாதங்களும் நடந்துள்ளன.
இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர் தலை இலக்கு வைத்து அரசியல் கட்சிகளு டன் சுயேட்சைக் குழுக்கள் பலவும் தேர்தல் களமிறங்கத் தயாராகியுள்ளன. தேர்தல் என்று வந்துவிட்டால் அரசியல் ஆர்வமுடையோர் விழித்துக் கொள்வது தவிர் க்க முடியாதது.
அதிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பது ஊர் மக்களை கடுமையாக ஆர்வப்படுத்துவது.
அரசியல் கட்சிகள் தங்கள் ஆதரவாளர் களுக்கு ஆசனம் வழங்கி அவர்களை ஆசு வாசப்படுத்துகின்ற தேர்தல் இதுவென்பதால் யாரை தேர்ந்தெடுப்பது என்ற விடயம் ஊர் முழுக்க விரிந்து பரந்து கிடக்கும்.
என்னை நியமியுங்கள் என்ற கோரிக்கைக்கு பஞ்சம் இராது. அரசியல் கட்சிகள் தமக்கு ஆசனம் தரவில்லை என்றதும் கட்சி மாறி களமிறங்குவது, சுயேட்சையாகப் போட்டியிடு வது, தனது கட்சிக்கு எதிராகப் பிரசாரம் செய் வது என்ற கூத்துக்களுக்கும் பஞ்சமிராது. இதுதான் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் இயல்பு.
இருந்தும் மாகாண சபைத் தேர்தல், பாராளு மன்றத்துக்கான பொதுத் தேர்தல் என்பவற் றின் வெற்றியைத் தீர்மானிப்பதில் உள்ளூ ராட்சி சபை கணிசமாகப் பங்காற்றுகிறது என்ற உண்மை ஏற்புடையது.
அதனால்தான் ஊர்ப் பிரமுகர்களுக்கு உள்ளூராட்சி சபையில் இடம்கொடுத்து அவர் கள் ஊடாக பாராளுமன்றத் தேர்தலில் மக்க ளின் ஆதரவைப் பெறுகின்ற தந்திரோபாயத் தில் அரசியல் கட்சிகள் மிகக் கவனமாக இருக் கின்றன.
இவை ஒருபுறமிருக்க, இம்முறை வடக்கு கிழக்கில் நடைபெறும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வித்தியாசமானதாக இருக்கும் என்று கூறுவதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன.
எது எவ்வாறாயினும் வடக்கு கிழக்கில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமாக இருந்தால், ஒட்டுமொத்த உள்ளூராட்சி சபைகளும் ஊழல் அற்ற; அரசியல் சார்பற்ற; பொதுத் தன்மை கொண்ட அமைப்பி டம் வருவதே பொருத்தமானதாகும்.
இதை நாம் கூறும்போது அரசியல் அற்ற பொது அமைப்பு என்பது சாத்தியமா? என்று நீங்கள் யாரேனும் கேட்கலாம்.
அவ்வாறு கேட்டால்; அரசியல் கட்சிகள் ஒன்றுகூடி பொது அமைப்பிடம் உள்ளூராட்சி சபைகளை ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்யும் பட்சத்தில் பொது அணி ஒன்று உள்ளூ ராட்சி சபைகளைப் பொறுப்பெடுப்பதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கிறது எனலாம்.
11-12-2017-
நன்றி-வலம்புரி
ஊழல் அற்ற பொது அமைப்பை முன்னிறுத்துவது பற்றி சிந்தியுங்கள்
Reviewed by Author
on
November 13, 2017
Rating:

No comments:
Post a Comment