அண்மைய செய்திகள்

recent
-

வரலாற்றிலேயே முதன்முறையாக பிரான்ஸில் சாதனை படைத்த இலங்கைப் பெண்!


சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பு மற்றும் விருது வழங்கி பாராட்டப்படும் புகைப்படத் தேர்ச்சியாளருக்கான விருதை [EFIAP] இலங்கை புகைப்படவியலாளரான ஜமுனீ றஸ்மிகா பெரேரா பெற்றுள்ளார்.
பிரான்ஸின் புகைப்படக்கலை சம்மேளனத்தினால் ஜமுனீ றஸ்மிகா பெரேராவுக்கு இந்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒரு பெண் புகைப்படப்பிடிப்பாளர் இவ்வாறான விருதை பெற்றுக்கொண்டமை இதுவே முதற்தடவையாகும்.

உலகில் அங்கீகாரம் பெற்ற புகைப்படக் கலைஞர்களின் தொழில் ஆற்றலை கௌரவிக்கும் உயர்வான விருது இதுவாகும்.
இந்த விருதிற்காக 20 நாடுகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்கள் தமது ஆக்கங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இது வரையில் ஜமுனீ றஸ்மிகாவினால் சமர்ப்பிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட புகைப்படங்களின் எண்ணிக்கை 513 ஆகும்.
தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட புகைப்படப் போட்டி மற்றும் கண்காட்சி மற்றும் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு ஜமுனீ றஸ்மிகாவினால் முடிந்துள்ளது.

இதுவரையில் இவர் 48 விருதுகளை பெற்றுள்ள இவர், 2nd International Photo Competition and EXHIBITION MYSTIC 2017 சர்வதேச போட்டியிலும் கலந்து கொண்டு சர்வதேச பாராட்டை பெற்றுள்ளார்.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ரஷ்யா, ஜப்பான், சீனா, ஈரான், ஓமான் இங்கிலாந்து, துருக்கி, ஏமன், ஐக்கிய அரபு இராச்சியம், பல்கீரியா, உக்ரேன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற புகைப்படக் கலைஞர்களுக்கான போட்டியில் கலந்து கொண்டு விருதுகளை பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் சர்வதேச புகைப்படக்கலைஞர்கள் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள ஜமுனீ, பிரான்ஸில் சர்வதேச புகைப்படக்கலைஞர் சம்மேளத்தினால் வழங்கப்படும் AFIP விருதையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்றிலேயே முதன்முறையாக பிரான்ஸில் சாதனை படைத்த இலங்கைப் பெண்! Reviewed by Author on November 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.