இந்த வீரருக்கு கல்தா: இவங்க மூணு பேரை தக்க வைக்க சென்னை திட்டம் -
எதிர்வரும் 2018 ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எல்லா விதத்திலும் தயாராகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சுமார் 2 ஆண்டுகள் சூதாட்ட தடைக்கு பின்னர் மீண்டும் அடுத்த ஆண்டு களமிறங்கவுள்ளது.
இந்நிலையில் இரு அணிகள் தொடருக்கு திரும்புவதால், ஒவ்வொரு அணியிலும் இரண்டு உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர் என மூன்று வீரர்களை தவிர, எஞ்சிய எல்லா வீரர்களையும் ஏலத்தில் விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இதனால் எல்லா அணி நிர்வாகமும் யாரை தக்க வைப்பது என பெரும் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரை தக்க வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் சொந்தமண் மைந்தனான அஷ்வினும் ஒருவர்.
வெளிநாட்டு வீரர்களில் தென் ஆப்ரிக்க வீரர் பாப் டுபிளசி துடுப்பாட்டத்தில் கைகொடுப்பார் என்பதால் அவரை தக்க வைக்க திடமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் செல்லப்பிள்ளையாக திகழும் ‘தல’ டோனி, வழக்கம் போல தனது அணித்தலைவர் பொறுப்பை தொடர்வார் என்பதில் சந்தேகமே இல்லை.
இதை ஏற்கனவே தமிழக பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போதே அணி நிர்வாகம் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது.
இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கழட்டி விடப்படும் வீரர் ரெய்னா என்பது உறுதியாகி உள்ளது.
இந்த வீரருக்கு கல்தா: இவங்க மூணு பேரை தக்க வைக்க சென்னை திட்டம் -
Reviewed by Author
on
November 14, 2017
Rating:

No comments:
Post a Comment