முல்லைத்தீவு மாவட்டத்தில் 42926 குடும்பங்கள் மீள்குடியேற்றம் -
முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில் 42 ஆயிரத்து 926 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 924 பேர் மீள்குடியேறியிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலர் பிரிவுகளிலும் மக்கள் மீள்குடியேறியிருக்கின்றனர்.
துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 3 ஆயிரத்து 902 குடும்பங்களும், மாந்தை கிழக்கில் 3 ஆயிரத்து 3 குடும்பங்களும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 6 ஆயிரத்து 75 குடும்பங்களும், கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 13 ஆயிரத்து 451 குடும்பங்களும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 13 ஆயிரத்து 159 குடும்பங்களும், வெலிஓயா பிரதேசத்தில் 3 ஆயிரத்து 336 குடும்பங்களுமாக மொத்தம் 42 ஆயிரத்து 926 குடும்பங்கள் மீள்குடியேறியிருக்கின்றதாக குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 42926 குடும்பங்கள் மீள்குடியேற்றம் -
Reviewed by Author
on
November 14, 2017
Rating:

No comments:
Post a Comment