அண்மைய செய்திகள்

recent
-

நடுத்தர குடும்பத்தில் பிறந்து பிரித்தானியாவின் இளவரசியான கேட் -


நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது அறிவாற்றல், நல்லொழுக்கம் மற்றும் தனது அழகால் பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனதில் இடம்பிடித்து பிரித்தானியாவின் இளவரசியாக வலம் வருகிறார் கேட் மிடில்டன்.
மிச்செல் மிடில்டன்- கரோல் தம்பதியினருக்கு 1982 ஆம் ஆண்டு மூத்த மகளாக பிறந்தார் கேட். இவரது தந்தை மிச்செல் பிரிட்டிஷ் ஏர்வே விமானத்தில் பணியாற்றியவர்.



மிச்செல் ஜேர்டானில் பணியாற்றிய காரணத்தால், தனது சிறு வயது வரை கேட் ஜோர்டானில் வசித்துள்ளார். அதன்பின்னர் 1986 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
St Andrew's School பள்ளியில் பயின்ற இவர், 2001 ஆம் ஆண்டு University of St Andrews - இல் MA - Hostory Of Art பயின்றுள்ளார்.
தனது பட்டப்படிப்பினை முடித்த பின்னர் Jigsaw என்ற Fashin Cloth நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இவருக்கு பிபா மிடில்டன் என்ற தங்கையும், ஜேம்ஸ் என்ற தம்பியும் உள்ளனர்.


நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தனது கல்லூரி காலத்தில் பகுதி நேரமாகவும் பணியாற்றியுள்ளார்.
2001 ஆம் ஆண்டு St Andrews பல்கலைகழத்தில் பயின்றபோது தன்னுடன் ஒன்றாக படித்த பிரித்தானிய இளவரசர் வில்லியம்முடன் நட்புடன் பழகியுள்ளார். ஆரம்பத்தில் நட்பாக இருந்தவர்கள் பின்னர் காதலர்களானர்கள்.
2003 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் டேட்டிங் சென்ற புகைப்படம் ஊடங்களில் வெளியானது, ஆனால் இதுகுறித்து இருவர் தரப்பிலும் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
2008 ஆம் ஆண்டு வில்லியம்மின் சகோதரர் பீட்டர் பிலிப்ஸ் திருமணத்தின் மிடில்டன் கலந்துகொண்டதால், இவர்கள் இருவரும் திருமணம் செய்யப்போகிறார்கள் என உறுதிப்படுத்தப்பட்டது.
இதற்கிடையில் இவர்கள் இருவருக்குமிடையே Break Up என்ற செய்தியையும் ஊடகங்கள் தலைப்பு செய்திகளாக வெளியிட்டு வந்த நிலையில், 2010 ஆம் ஆண்டு கென்யாவில் வைத்து இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
2011 ஆம் ஆண்டு Westminster Abbey - இல் இவர்கள் திருமணம் கோலாகலமாக நடந்தது, தம்பதியினருக்கு ஜார்ஜ், சார்லோட் என இரு குழந்தைகள் உள்ளனர். பிரித்தானியாவில் அரச குடும்பத்தினருக்கு என்று சில கட்டுப்பாடுகள் உள்ளன.



அந்த குடும்பத்திற்கு எந்த ஒரு பெண் மணமகளாக வந்தாலும் அதனை கடைபிடித்து கட்டுக்கோப்பாக வாழ வேண்டும், கேட் மிடில்டன் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும், தனது எளிமையான குணத்தால் பிரித்தானியாவின் இளவரசியாக வலம் வருகிறார்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்து பிரித்தானியாவின் இளவரசியான கேட் - Reviewed by Author on November 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.