வடக்கில் முக்கிய இடங்களில் இராணுவ முகாம்கள் இருக்கும் - பொன்சேகா திட்டவட்டம்
இராணுவத்தை வடக்கிலிருந்து வெளியேற்ற தமிழ் அரசியல் தலைவர்கள் கோரினாலும் தேசிய பாதுகாப்பு விடயத்தில் அவர்களுடன் அரசு சமரசத்துக்குச் செல்லாது என்று முன்னாள் இராணுவத் தளபதியும் இந்நாள் அமைச்சருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவு - செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையில், இந்த விடயங்களை அவர் தெரிவித்தார்.
வடக்கிலிருந்து இராணுவத்தினர் குறைக்கப்படுகின்றனர் என்று மகிந்த அணியினர் பொய்யான பரப்புரைகளை முன்னெடுக்கின்றனர்.
வடக்கு-கிழக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டிருக்கவேண்டும். அதேபோன்று இராணுவத்தின் பிரசன்னம் தெற்கிலும் அவசியம்.
போர் நிறைவுக்கு வந்துள்ளதால் வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றவேண்டும் என தமிழ் அரசியல் தலைவர்கள் கோரி வருகின்றனர்.
எனினும் தேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசு ஒருபோதும் சமரசத்துக்கு போகாது என்று அமைச்சர் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.
வடக்கில் முக்கிய இடங்களில் இராணுவ முகாம்கள் இருக்கும் - பொன்சேகா திட்டவட்டம்
Reviewed by Author
on
November 19, 2017
Rating:

No comments:
Post a Comment