எனது அக்காவை ஜெயலலிதா பயன்படுத்திக்கொண்டார்: திவாகரன் பரபரப்பு பேட்டி -
கடந்த வாரம் தொடர்ந்து 5 நாட்கள் நடந்த வருமான வரி சோதனையும், அதை தொடர்ந்து நடத்தப்பட்ட நேற்றைய போயஸ் இல்ல சோதனையும் தங்கள் குடும்பத்தை குறிவைத்து நடத்தப்படுவது என்று திவாகரன் மற்றும் தினகரன் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தஞ்சையில் பேட்டி அளித்த திவாகரன் ஜெயலலிதா தனது சகோதரி சசிகலாவை பயன்படுத்திக் கொண்டார், ஆனால் பாதுக்காக்க தவறிவிட்டார் என்ற பொருள்பட பேட்டி அளித்தார்.
“1996 முதலே சசிகலா விசாரணை வளையத்தில் தான் இருக்கிறார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே சசிகலா விசாரணை வளையத்தில் தான் இருந்தார்.
ஏனென்றால் ஜெயலலிதா, சசிகலாவை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார் ஆனால் அவருக்கு எந்த விதமான பாதுகாப்பையும் வழங்கத் தவறினார். சிகிச்சையின் போது ஆதாரத்திற்காகவே ஜெயலலிதா வீடியோ எடுக்கச் சொன்னார் என்று கூறியுள்ளார்.
எனது அக்காவை ஜெயலலிதா பயன்படுத்திக்கொண்டார்: திவாகரன் பரபரப்பு பேட்டி -
Reviewed by Author
on
November 19, 2017
Rating:

No comments:
Post a Comment