இலங்கையில் மற்றுமொரு இயற்கை அனர்த்தம் ஏற்படுமா? மர்ம கடிதத்தால் ஆபத்தா? -
இந்த வருடதின் இறுதியில் ஏற்படவுள்ள பூமி அதிர்ச்சி மற்றும் சுனாமி ஆபத்து அனர்த்தங்களால் இலங்கைக்கு ஆபத்து என எச்சரிக்கப்பட்டிருந்தது.
எனினும் இலங்கைக்கு அவ்வாறான அச்றுத்தல் இல்லையென புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
அனர்த்தம் தொடர்பில் அச்சப்பட தேவையில்லை எனவும், அறிவியல் ரீதியாக அது அடிப்படையற்றதென பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இந்த ஆபத்து உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்படவுள்ள சுனாமி மற்றும் பூமியதிர்ச்சி தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இனந்தெரியாத நபர் ஒருவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வருட இறுதியில் ஏற்பட கூடிய ஆபத்திற்கு முகம் கொடுப்பதற்கு தற்போதிருந்தே தயாராக இருக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இந்திய பிரதமர் அல்லது இந்தியாவின் எந்தவொரு அதிகாரியும் கடிதத்திற்கு பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது..
பாகிஸ்தான் புலனாய்வு பிரிவிடம் குறித்த அறிக்கை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. அதற்கமைய ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முகம் கொடுப்பதற்காக பாகிஸ்தான் அதிகாரிகள் தயாராக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கையில் மற்றுமொரு இயற்கை அனர்த்தம் ஏற்படுமா? மர்ம கடிதத்தால் ஆபத்தா? -
Reviewed by Author
on
November 19, 2017
Rating:

No comments:
Post a Comment