உலகின் மிகவும் பிரபலமான நாடு எது தெரியுமா? வெளியான பட்டியல் -
அரசியல் மற்றும் சந்தை நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நிறுவனம் ஒன்று சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.
முதலிடத்தில் இருந்த அமெரிக்கா இந்த முறை 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.
பிரான்ஸ் மற்றும் ஜப்பான் பல இடங்கள் முன்னேறி 3 மற்றும் நான்காவது இடங்களை கைப்பற்றியுள்ளது.
ஆண்டு தோறும் உலகின் 50 நாடுகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு குறித்த நிறுவனமானது தரவரிசையில் முன்னணியில் உள்ள 10 நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இதில் ஒவ்வொரு நாட்டின் ஏற்றுமதி, அரசாங்கம், கலாச்சாரம், மக்கள்தொகை, சுற்றுலா மற்றும் குடியேற்றம் அல்லது முதலீடு ஆகியவை தொடர்பில் ஆராயப்படுகின்றன.
அந்தவகையில் இந்த ஆண்டு வெளியான பட்டியலில் இந்த நாடுகள் இடம்பெற்றுள்ளன.
- ஜேர்மனி
- பிரான்ஸ்
- பிரித்தானியா
- ஜப்பான்
- கனடா
- அமெரிக்கா
- இத்தாலி
- சுவிட்சர்லாந்து
- அவுஸ்திரேலியா
- ஸ்வீடன்
உலகின் மிகவும் பிரபலமான நாடு எது தெரியுமா? வெளியான பட்டியல் -
Reviewed by Author
on
November 19, 2017
Rating:

No comments:
Post a Comment