அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையின் பாடப் புத்தகங்களில் தமிழர்களின் வரலாறு! -


எதிர்காலத்தில் தமிழர்களின் வரலாற்றை உள்ளடக்கிய புதிய பாடப் புத்தகங்களை அச்சிட நடவடிக்கை எடுக்கப் போவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷணன் தெரிவித்துள்ளார்.
சைவசமய பாடப் புத்தகங்களிலுள்ள தவறுகளை திருத்தி அச்சிட ஏற்பாடு செய்யப் போவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் அவர் உரையாற்றினார்.

புதிய ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்மொழி மூலம் 1200க்கு மேற்பட்ட ஆசிரியர் ஆலோசகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நுவரெலியாவில் தேசிய உயர்கல்வி நிலையம் ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையின் பாடப் புத்தகங்களில் தமிழர்களின் வரலாறு! - Reviewed by Author on November 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.