புனித யோசவ்வாஸ் ஆண்டை முன்னிட்டு கலையருவி அமைப்பினால் நடாத்தப்பட்ட போட்டிகள்
புனித யோசவ்வாஸ் ஆண்டை முன்னிட்டு
கலையருவி அமைப்பினால் நடாத்தப்பட்ட போட்டிகள்
இலங்கையில் இவ்வாண்டு கத்தோலிக்க திருச்சபையால் புனித யோசவ்வாஸ் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாண்டுக்குரிய பல்வேறு செயல் திட்டங்கள் மன்னார் மறைமாவட்டத்திலும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரை இயக்குனராகக் கொண்டு இயங்கும் மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பண மையம் ‘கலையருவி’ அமைப்பு புனித யோசப்வாஸ் ஆண்டை முன்னிட்டு மன்னார் மறைமாவட்டத்தில் பல்வேறு போட்டி நிகழ்வுகளை நடாத்தியது.
கட்டுரை-கவிதை-சித்திரம்-பேச்சு-தனிப்பாடல்ää குழுப்பாடல்-தனி நடனம்-குழு நடனம்-நாடகம்-பாடல் இறுவட்டுத் தயரிப்பு என பல போட்டிகள் நடாத்தப்பட்டன. மன்னார் மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குகளைச் சேர்ந்த மாணவர் மாணவியர் இப்போட்டிகளில் உற்சாகமாகப் பங்கெடுத்தனர். இப்போட்டிகளில் வெற்றிபெற்றோர் பற்றிய விபரங்கள் மன்னார் மறைமாவட்ட மாதாந்தப் பத்திரிகையாகிய ‘மன்னா’ பத்திரிகையில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.
மாணவர் மற்றும் வளர்ந்தோர் மத்தியில் புனித யோசப்வாஸ் அடிகளாரைப்பற்றிய அறிவை-விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்-அவர்களின் ஆற்றல் திறமைகளை வெளிக்கொண்டுவருவதும் இப்போட்டிகளின் நோக்கமாகும். இப்போட்டிகளில் தனி நடனம்-குழு நடனம் மற்றும் நாடகப் போட்டிகளின் படங்களை இங்கே காணலாம்.
புனித யோசவ்வாஸ் ஆண்டையொட்டி அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரை இயக்குனராகக் கொண்ட மன்னாா் மறைமாவட்ட சமூகத் தொடா்பு அருட்பணி மையம் கலையருவி நடாத்திய நாடகப் போட்டியில் முதலிடம் பெற்ற வவுனியாப் பங்கு நாடகத்தின் பதிவுகள் இவை.


புனித யோசவ்வாஸ் ஆண்டை முன்னிட்டு கலையருவி அமைப்பினால் நடாத்தப்பட்ட போட்டிகள்
Reviewed by Author
on
November 06, 2017
Rating:
Reviewed by Author
on
November 06, 2017
Rating:




















No comments:
Post a Comment