துப்பாக்கி முனையில் இளைஞன் கடத்தல் முயற்சி வவுனியாவில் சம்பவம்
வவுனியா புகையிரத நிலைய வீதி சுத்தானந்த மண்டபத்திற்கு முன்பாக இன்று ( 12.11) காலை 5.45மணியளவில் இளைஞனொருவன் துப்பாக்கி முனையில் கடத்த முயற்சித்த சம்பவம் பொதுமக்களினால் முறியடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா நகரிலிருந்து புகையிரத நிலைய வீதியூடாக வாகனத்தில் பயணித்த வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த கஜேந்திரன் , தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனி கட்சியின் வடமாகாண அமைப்பாளர் பொன்னுத்துரை அரவிந்தன் ஆகியவர்களை இரு சொகுசு வாகனத்தில் வந்த 6பேர் கொண்ட குழுவினர் வழிமறித்து தங்களது வாகனத்தில் ஏறுமாறு தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த இளைஞன் வாகனத்தில் ஏற மறுப்பு தெரிவித்தமையடுத்து துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர்.
உடனே பொதுமக்கள் அவ்விடத்தில் கூடியதுடன் 3நபர்கள் ஒரு வாகனத்தில் தப்பித்து சென்றுள்ளதாகவும் மற்றை 3நபர்களையும் அவர்களின் வாகனத்தையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கொடுக்கல் வாங்கல் பிரச்சனையே இவ் சம்பவத்திற்கு காரணம் எனவும் தற்போது துப்பாக்கியை காட்டி கடத்த முயற்சித்த புத்தளத்தினை சேர்ந்த 31,31,34 வயதுடைய சந்தேகநபர்கள் மூவரிடம் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
துப்பாக்கி முனையில் இளைஞன் கடத்தல் முயற்சி வவுனியாவில் சம்பவம்
Reviewed by Author
on
November 12, 2017
Rating:

No comments:
Post a Comment