அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் 8500 சிறுவர்கள் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனர்.....


2017 ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சிறுவர் சித்திரவதைகள் தொடர்பில் 8548 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.இந்த சித்திரவதைகளில் பாலியல் துஸ்பிரயோகங்களும் உள்ளடங்குகின்றன. இந்த முறைப்பாடுகளில் கொழும்பிலேயே அதிக சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டு;ள்ளது.

இதன்படி கொழும்பில் 1232, கம்பஹாவில் 925, களுத்துறையில் 550, குருணாகலையில் 490, யாழ்ப்பாணத்தில் இருந்து 177, வவுனியாவில் இருந்து 122, மட்டக்களப்பில் இருந்து 170, முல்லைத்தீவில் இருந்து 125 மற்றும் கிளிநொச்சியில் இருந்து 117 என்ற அடிப்படையில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்தநிலையில் சிறுவர் சித்திரவதைகள் தொடர்பில் அதிகார சபைக்கு 1929 என்ற இலக்கங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தி முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் என்று அதிகார சபை அறிவித்துள்ளது.

இலங்கையில் 8500 சிறுவர்கள் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனர்..... Reviewed by Author on December 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.