அண்மைய செய்திகள்

recent
-

சீனாவின் பொறிக்குள் முறையாகச் சிக்கிக் கொண்டது இலங்கை!


சீனாவின் கடன் வலைக்குள் சிக்கிக் கொண்ட இறுதி நாடு இலங்கை என்று, ஆசியன்டைம்ஸ் என்ற சர்வதேச ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக அவ் இணையத்தளத்தின் கட்டுரை ஒன்றில் இந்த விடயம் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றனவும் இலங்கைக்கு கடன்களை வழங்கியுள்ளன. ஆனால் அந்த அமைப்புக்களது கடன்களைப் போன்று சீனாவின் கடன்கள் இலகுவானவை இல்லை.
சீனா தமது கடன்களைக் கொண்டு, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் தேவைகளைப் பயன்படுத்தி, அந்த நாடுகளின் வளங்களை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.

இதனால் நீண்டகாலத்துக்கு குறிப்பிட்ட நாடுகள் கடன்சுமைக்குள் தள்ளப்படும் நிலை உள்ளது. இலங்கையும் அவ்வாறான நிலைமையையே எதிர்நோக்கி இருக்கிறது என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் பொறிக்குள் முறையாகச் சிக்கிக் கொண்டது இலங்கை! Reviewed by Author on December 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.