மன்னார் கலையருவியின் வெளியீடாக அருட்பணி தமிழ்நேசன அடிகளாரின் இரண்டு புதிய பிரசவங்கள்!
மன்னார் கலையருவியின் வெளியீடாக அருட்பணி தமிழ்நேசன அடிகளாரின் இரண்டு புதிய பிரசவங்கள்!
”தமிழியல் தடங்கள்“ மற்றும் ”இலக்கியத்திலே பண்பாட்டு மயமாக்கல்” என்ற இரண்டு ஆய்வு நூல்களை வெளிக்கொணா்ந்துள்ளார்.
”தமிழியல் தடங்கள்” என்ற நூல் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகும். கடந்த பத்து வருடங்களில் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளில் தமிழியல் சாா்ந்த 14 கட்டுரைகளைத் தொிந்தெடுத்து “தமிழியல் தடங்கள்“ என்ற மகுடத்தின்கீழ் இந்த நூலை வெளியிட்டுள்ளாா்.
இந்நூலுக்கு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலைப் பேராசிாியா்
செ. யோகராசா அவா்கள் அணிந்துரை எழுதியுள்ளாா். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிாியா் கி. விசாகரூபன் அவா்கள் அருட்பணி தமிழ்நேசனைப்ற்றிய குறிப்பை எழுதியுள்ளாா். இந்நூலின் கட்டுரைகள் அவற்றின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக்கொண்டு
1. தமிழும் தனிநாயக அடிகளும்,
2. தமிழும் செம்மொழித் தகுதியும்,
3. தமிழும் இலக்கியமும்,
4. தமிழும் கிறிஸ்தவமும் என்ற நான்கு பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அருட்பணி தமிழ்நேசன மேற்கொண்ட முதுதத்துவமாணிப் பட்டத்திற்கான ஆய்வேடாகும். ”ஈழத்துக் கத்தோலிக்க தமிழ்க் கவிதையும் பண்பாட்டு மயமாக்கலும் (1950 - 2005)” என்ற தலைப்பிலான ஆய்வேட்டினை சாதாரண வாசகா்களுக்கு ஏற்றவகையில் இலகுபடுத்தி அமைத்து, ”இலக்கியத்திலே பண்பாட்டு மயமாக்கல்” என்ற பெயாில் நூலாக வெளிக்கொணா்ந்துள்ளாா்.
இந்நூலுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலைத் தமிழ்ப் பேராசிாியா் எஸ். சிவலிங்கராஜா அவா்கள் அணிந்துரை எழுதியுள்ளாா். திருமறைக் கலாமன்ற நிறுவுனரும், இயக்குனருமாகிய பேராசிாியா் நீ. மாிய சேவியா் அடிகளாா் நீண்ட முன்னுரை எழுதியுள்ளாா். அத்துடன் நூலாசிாியா் பற்றிய குறிப்பையும் அவா் எழுதியுள்ளாா். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தவ இஸ்லாமிய நாகரீகத்துறையின் தலைவா் பேராசிாியா் விக்ரா் பிலேந்திரன் அடிகளாா் இந்நூலுக்கு கருத்துரை வழங்கியுள்ளாா்.

மன்னார் கலையருவியின் வெளியீடாக அருட்பணி தமிழ்நேசன அடிகளாரின் இரண்டு புதிய பிரசவங்கள்!
Reviewed by Author
on
December 31, 2017
Rating:
Reviewed by Author
on
December 31, 2017
Rating:


No comments:
Post a Comment