அண்மைய செய்திகள்

recent
-

முதலமைச்சர் கூறிய கருத்துக்கு உங்களிடம் நியாயம் தேடுங்கள்....


வாரம் ஒரு கேள்வி பதில் என்ற பகுதியில் கட்சிக்கு கட்டுப்படுதல் தொடர்பில் வடக்கு முதலமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் வழங்கிய பதில் பல்வேறு நியாயப்பாடு களை பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டுகிறது.

அரசியல் கட்சி என்ற எல்லை கடந்து தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகள் தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் முன்வைக்கும் நியாயமான கருத் துக்கள் விமர்சனத்துக்கு உட்பட்டவை அல்ல.
அவை தொடர்பில் ஒரு தெளிவான பதிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்குவதே பொருத்துடையது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அல்லது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கட்டுப்படுதல் என்பது தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை அந்தக் கட்சி பின்பற்றுவதி லும் அதனை இறுக்கமாக கடைப்பிடிப்பதனை யும் பொறுத்தே அமையும்.
தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி களை மீறுதல் என்பது அடிப்படையில் தவ றானது. தமிழ் மக்களிடம் வாக்குகள் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே தேர்தல் விஞ்ஞாபன மும் தேர்தல் வாக்குறுதிகளும் முன்வைக்கப் படுவதாக இருந்தால் அது தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற மிக மோசமான வேலை என் பதை எவரும் மறுதலிக்க மாட்டார்கள்.


மக்களை ஏமாற்றுவதை செய்கின்ற எவ ரும் அடிப்படை நியாயமற்றவர்கள் என்பதை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
வடக்கின் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ் வரன் அவர்களை அழைத்தபோது அவர் விடு த்த முதலாவது நிபந்தனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இடம்பெற்றிருக்கக்கூடிய அத்தனை அரசியல் கட்சித் தலைவர்களும் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக அழைத்தால் மட்டுமே முதலமைச்சர் வேட்பாளராக வர முடி யும் என்பதுதான்.

இந்த நிபந்தனை தமிழ் மக்களின் உரிமை கள் விடயத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது முதலமைச்சர் விக் னேஸ்வரனிடம் உறுதியாக இருந்துள்ளது என்பதற்கு போதுமான ஆதாரமாகும்.
ஒருவேளை கூட்டமைப்பின் கட்சித் தலை வர்கள் ஒன்றுபட்டு அவரை அழைக்காது விட் டிருந்தால், முதலமைச்சர் பதவி ஒன்றும் எனக் குப் பெரிதல்ல என விக்னேஸ்வரன் அவர்கள் கூறியிருப்பார்.
ஆக, பதவிக்கு வர முன்பதாகவே கூட்ட மைப்புக்குள் ஒற்றுமையும் ஒருமித்த கருத்தும் இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் மக் களுக்கான உரிமை விடயத்தில் ஒன்றுபட்டு குரல் கொடுக்க முடியும் என்பதை முதலமைச் சர் விக்னேஸ்வரன் அவர்கள் ஆணித்தரமாக கூறியுள்ளமை புலனாகும்.
எது எவ்வாறாயினும் கட்சிக்கு கட்டுப்படுதல் என்ற விடயம் தொடர்பில் முதலமைச்சர் முன் வைத்த அத்தனை கருத்துக்களிலும் ஆழமான நியாயப்பாடுகளும் உண்மைகளும் உள்ளன.

முதலமைச்சர் கூறிய பதிலில் எந்த ஒரு இடத்திலும் சொந்த அரசியல் நலன் என்ற விட யம் புரையோடவில்லை. மாறாக தமிழ் மக் களுக்கு நாம் கொடுத்த வாக்குறுதிகள் அத ற்கு ஆதாரமாக இருக்கக்கூடிய தேர்தல் விஞ் ஞாபனம் இதில் எந்த தளர்வும் இருக்கக் கூடாது என்பதே ஆகும்.

ஆகவே முதலமைச்சர் கூறிய கருத்துக் களுக்கு உயிர்ப்புக் கொடுத்து அரசியல் அறத் தைப் பாதுகாக்கின்ற தார்மீகப் பணியை சம்பந் தர் தலைமையிலான கூட்டமைப்பு செய்ய வேண்டும் என்பதே இங்கு கருத்துரைப்பிற் குரியதாகும்.
-வலம்புரி-
முதலமைச்சர் கூறிய கருத்துக்கு உங்களிடம் நியாயம் தேடுங்கள்.... Reviewed by Author on December 31, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.