ஈழத் தமிழ் மக்களும் தமிழ்க் கடவுளும் ஒன்றுதான்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூறிய புலவன் பாடலின் அடியில் கணியன் பூங்குன்றனார் என்று குறிப்பிட்டாராம்.
இதுபோலவே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறிக்கொண்டாலும் சமயம் சார்ந்து, சமய அனுட்டான முறை சார்ந்து, கட வுள்களும் வழிபாட்டு முறைமைகளும் சமய வாழ்வியல்களும் வேறுபட்டே காணப்படுகின்றன.
சைவத்தின் முழுமுதற் கடவுளாகிய சிவப் பரம்பொருள் தன் நடராஜ வடிவத்தில் எந்த அழித்தலையும் செய்யவில்லை. இதற்குக் காரணம் நடராஜர் வடிவம் இந்தப் பிரபஞ்சத் தின் இயங்கு நிலைக்கானது.
பிரபஞ்சத்தை இயக்குகின்ற வடிவம் தாங்கி நிற்பவன் கொல்லுதல் ஆகாது எனும் பொருள் நிலை கருதியே சிவப்பரம்பொருள் தன் வடிவத் தினின்று உடல் அழித்தலைச் செய்யவில்லை.
சூரபன்மனை அழிக்க வேண்டும் எனத் தேவர்கள் இரஞ்சுகின்றனர். தேவர் குறை தீர்க்க சிவன் தன் நெற்றிக் கண்ணினின்று ஆறு பொறிகளை வரவழைத்து ஆறுமுகக் கட வுளை உற்பவம் ஆக்குகின்றார்.
இப்போது சூரனை சங்காரம் செய்யும் பொறுப்பு முருகனுடையதாகின்றது. போர் தொடங்குகிறது. சூரசங்காரத்துக்காக அவ தரிக்கப்பட்ட முருகன், தன் வேற் சக்தி கொண்டு எடுத்த எடுப்பிலேயே சூரனை வதம் செய்திருக்க வேண்டும்.
ஆனால் தமிழ்த் திரைப்படங்கள் போன்று வில்லன் வாழ்வதற்குக் கதாநாயகன் பல சந் தர்ப்பங்கள் கொடுக்கும் காட்சி சூரசங்காரத் திலும் காணப்படுகின்றது.
முருகன் தன் திருப்பெரு வடிவத்தைக் காட்டுகிறான். திருப்பெருவடிவம் கண்ட சூரன் முருனைத் தொழுதேத்துகிறான்.
அட! முருகனின் திருப்பெரு வடிவம் கண்ட மாத்திரத்தில் சூரன் திருந்திவிட்டான் என்றால், அதுதான் இல்லை.
மீண்டும் போர் தொடுக்கிறான். அட! சூரா நீ திருந்த மாட்டாய் என்று சூரனைக் கொல்ல வேண்டிய முருகன்; சூரனை அடக்கி, மயிலாக வும் சேவலாகவும் ஆக்கிக் கொள்கிறான். தமி ழ்க் கடவுள் முருகனின் இந்த விட்டுக் கொடுப் பும் இரக்கத் தன்மையும் அவனைத் தலைவ னாகக் கொண்ட தமிழ் மக்களிடமும் இருக் கவே செய்கிறது.
ஆம், எவ்வளவுதான் தமிழ் அரசியல்வாதி கள் தமிழ் மக்களை ஏமாற்றினாலும் சரி, இந்த முறை மட்டும் அவர்களுக்கு வாக்களிப் போம் என்று நினைப்பது,
என்ன சொன்னாலும் அதனை அப்படியே நம்பி விடுவது, ஆய்ந்தறிந்து உண்மையைக் கண்டறிய முயற்சிப்பதில்லை, அரசியல்வாதி சொல்லிவிட்டால்-ஊடகத்தில் வெளிவந்து விட்டால், அதுவே உண்மை என்று நம்புகின்ற பலயீனம் என்று நம்மை விட்டு நீங்குகிறதோ அன்றுதான் தமிழினத்துக்கு விடிவு கிடைக்கும்.
ஆனால் மீண்டும் மீண்டும் ஒரே தவறைச் செய்கின்ற குறைபாடு எங்கள் குருதியோடு கலந்துவிட்டது.
ஆம், முருகன் போல திருப்பெரு வடிவத் தைக் காட்டுவது பின்னர் சூரனைக் கொல்லா மல் அவனுக்கு ஏதோவொரு வகையில் சந் தர்ப்பம் கொடுத்து உயர்ந்த இடத்தில் வைத் திருப்பது என்ற தவறுகளை தமிழ் மக்களும் செய்து கொண்டேயிருக்கின்றனர்.
என்றைக்கு உரிய தண்டனை வழங்க தமிழ் மக்கள் தயாராகின்றனரோ அன்றைக்குத்தான் தமிழ் அரசியல்வாதிகள் தம்மை திருத்திக் கொள்ளுவர்.
தமிழ்க் கடவுள்போல தமிழ்மக்களும் இருந் தால் அதர்மவாதிகளும் உயர்ந்த இடத்தில் தான் இருப்பர்.
-valampuri-

Reviewed by Author
on
December 19, 2017
Rating:
Reviewed by Author
on
December 19, 2017
Rating:

No comments:
Post a Comment