மன்னார் மறைமாவட்ட மூத்தோர் சங்கத்தின் கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா.
மன்னார் மறைமாவட்ட ஆயரின் கீழ் செயற்படும் மன்னார் மறைமாவட்ட மூத்தோர் சங்கத்தின் கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா 15.12.2017 வெள்ளிக்கிழமை காலையில் மன்னார் தாழ்வுபாடு வீதியில் அமைந்துள்ள மறைமாவட்டப் பொதுநிலையினர், குடும்பப் பணியகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட மூத்தோர் சங்கத்தின் மறைமாவட்ட இயக்குனர் அருட்பணி. அல்பன் இராஜசிங்கம் அ.ம.தி அடிகளாரின் நெறிப்படுத்துதலில் இந் நிகழ்வு இடம் பெற்றது.
பெருந்தொகையான மறைமாவட்ட மூத்தோர் சங்க உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இளைமைமிகு எண்ணங்களோடும், ஆற்றல்களோடும் சிறப்பான கலை பண்பாட்டு நிகழ்வுகளை வெளிக் கொணர்ந்தனர்.
இச்சங்கம் 2000ம் ஆண்டளவில் ஓய்வு நிலை ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் இயக்குனராக தற்போதைய குருமுதல்வர் அருட்பணி. அ.விக்ரர் சோசை அவர்கள் பணியாற்றினார்.
ஆரம்பப் பண்பாட்டு நிகழ்வுகளோடு மன்னார் மறைமாவட்ட மூத்தோர் சங்கத்தின் தலைவர் திரு.எ.மிராண்டா அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இவ் விழாவிற்கு மன்னார் மறைமாவட்ட திருத்ததூதுப்பணி நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்கள் முதன்மை விருந்தினராக வருகைதந்து சிறப்பித்தார். அத்தோடு சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரச செயலர் திருமதி. ஸ்ரனி டிமெல் அவர்களும், கௌரவ விருந்தினராக மன்னார் பிரதேச செயலர் திரு.அ.பரமதாஸ் அவர்களும் மன்னார் வைத்தியசாலை ஆன்மிக அருட்பணிக்குப் பொறுப்பான அருட்பணி ஜெறோம் லெம்பேட் அ.ம.தி அடிகளாரும், மூத்தோர் சங்களின் உரிமைகள் மேம்பாட்டு மன்னார் மாவட்ட அரச பணியாளர் திரு.ஜ.செந்தில்குமரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் இச் சங்கத்தின் வளர்ச்சி அறிக்கையை மன்னார் மறைமாவட்ட மூத்தோர் சங்கத்;தின் செயலாளர் திரு.எம்.ஆனந்தம் றோச் அவர்களும், வருடாந்தக் கணக்கறிக்கையை திரு.மேவின் குரூஸ் அவர்களும், நன்றியுரையை திரு. அந்தோனிமுத்து அவர்களும் வழங்கினார்கள். இறுதியாக, வந்திருந்த மூத்தோர் அனைவருக்கும் பரிசுகளும், மதிய உணவும் வழங்கப்பட்டன.

மன்னார் மறைமாவட்ட மூத்தோர் சங்கத்தின் கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா.
Reviewed by Author
on
December 17, 2017
Rating:

No comments:
Post a Comment