வடக்கு மாகாண சபையின் வரவு - செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்
இலங்கையின் வடக்கு மாகாண சபையின் 2018ஆம் நிதியாண்டுக் குரிய வரவு செலவுத் திட்டம் ஏக மனதாக நிறைவேற்றிக்கொள்ளப்பட்டது.
வடக்கு மாகாண சபையின் 114 ஆவது அமர்வு நேற்று வியாழக்கி ழமை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் நடை பெற்றது. கடந்த 111வது அமர்வின் போது முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரனால் வரவு செலவுத்திட் டம் சமர்ப்பிக்கப்பட்டு,
நேற்று முன்தினமும் நேற்றும் அமைச் சுக்கள் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை உறு ப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறை வேற்றிக் கொள்ளப்பட்டது.
வடக்கு மாகாணத்திற்கு, எதிர்வரும் நிதி யாண்டுக்காக 26 ஆயிரத்து 754 மில்லியன் ரூபாய் நிதி முன்மொழியப்பட்டது.
அதன் பின்னர் உள்@ராட்சி, கல்வி, விவசாயம், சுகாதாரம், மீன்பிடி, போக்குவர த்து, கூட்டுறவு மற்றும் மகளிர் விவகாரம் உள்ளிட்ட துறைகளின் ஒதுக்கீடுகள் விவா தத்திற்கு உட்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விக்னேஸ்வரன் வரவு செலவுத் திட்ட நிதி யொதுக்கீட்டை நேற்று மாலை முன்மொ ழிய, எதிர்க்கட்சித் தலைவர் வழிமொழிந் தார். அதனையடுத்து, வடக்கு மாகாண சபை யின் 2018ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக் கீட்டினை சபை ஏகமனதாக அங்கீகரிப்பதாக அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வை ஜனவரி மாதம் 9ஆம் திகதி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு, அன்று வரை சபை அமர் வுகளை அவைத்தலைவர் ஒத்திவைத்தார்.
வடக்கு மாகாண சபையின் வரவு - செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்
Reviewed by Author
on
December 17, 2017
Rating:

No comments:
Post a Comment