அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பாடசாலை மாணவர்கள் எழுவரை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப உத்தரவு - நடந்தது என்ன? -


பாடசாலையில், இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஏழு மாணவர்களையும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்புவதற்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரணை இலுப்பைக்குளம் பாடசாலையில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழு மாணவர்களை இவ்வாறு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்புவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
“மன்னார் - மடு கல்வி வலயத்திற்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் பாடசாலையில் கடந்த 10ஆம் திகதி இரவு களஞ்சிய சாலையில் வைக்கப்பட்டிருந்த உலர் உணவுப்பொருட்கள் திருட்டுப்போயிருந்தன.இந்த சம்பவம் தொடர்பில் மடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் கடந்த 22ஆம் திகதி இரவு ஏழு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இரணை இலுப்பைக்குளம் பாடசாலையில் கல்வி கற்று வந்த மாணவர்கள் என தெரிய வந்தது. இந்நிலையில், குறித்த ஏழு பேரையும் மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் பாடசாலை மாணவர்கள் எழுவரை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப உத்தரவு - நடந்தது என்ன? - Reviewed by Author on December 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.