வடகொரியா தாக்குதல் நடத்தப் போகிறதா? தென் கொரியா தமிழர்கள் சொல்லும் பதில் -
வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனால் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கபட்டன, இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை ஐ.நா வடகொரியா மீது பொருளாதார தடையை விதித்தது.
இதற்கு வடகொரியா இது போருக்கான செயலை போன்றது என ஐ.நா-வின் முடிவுக்கு அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்று தென் கொரியாவில் இருக்கும் தமிழர்களிடம் பேட்டி எடுத்துள்ளது,
அவர்களிடம் வடகொரியாவின் அணு ஆயுத சோதனை குறித்து கேட்ட போது, இது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும், அதுமட்டுமின்றி இங்கிருக்கும் தென்கொரிய அதிகாரிகளிடம் கேட்டாலும், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, அதைப் பற்றி எல்லாம நினைக்காதீர்கள் என்று கூறுவதாக தெரிவித்துள்ளனர்.
உண்மையை கூறவேண்டும் என்றால் வீட்டில் இருப்பவர்கள் தான் எங்களை தொடர்பு கொண்டு, வடகொரியா தாக்குதல் நடத்தப் போகிறதாமே என்று கேட்பார்கள்.
அப்போது தான் எங்களுக்கே தெரியவரும், எங்களைப் பொறுத்த வரை வடகொரியாவைப் பற்றி எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை, உண்மையை கூறவேண்டும் எனில் பயம் கூட இல்லை.
ஆனால் 2013-ஆம் ஆண்டு கொஞ்சம் பயம் இருந்தது, அப்போது இந்திய தூதரகம் அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து வைத்துள்ளோம் கவலை வேண்டாம் என்று கூறியிருந்தது, இறுதியாக சொல்ல வேண்டும் எனில் ஒரு பயமும் இல்லை என்றே கூறியுள்ளனர்.
வடகொரியா தாக்குதல் நடத்தப் போகிறதா? தென் கொரியா தமிழர்கள் சொல்லும் பதில் -
Reviewed by Author
on
December 26, 2017
Rating:

No comments:
Post a Comment