மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட 'சிறிலங்கா பொதுஜன பெரமுன' கட்சி வேட்பு மனுத்தாக்கல் (படம்)
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 'சிறிலங்கா பொதுஜன பெரமுன' கட்சி இன்று புதன் கிழமை மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
'சிறிலங்கா பொதுஜன பெரமுன' கட்சியின் வடமாகாணத்திற்கான அமைப்பாளரும், வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான எஸ்.எம்.ரஞ்சித் சமரகோண் தலைமையில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் போது மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.டிலான், மன்னார் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சிலுவை பீரிஸ் ஆகியோரும் சென்றிருந்தனர்.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய 'சிறிலங்கா பொதுஜன பெரமுன' கட்சியின் முக்கியஸ்தர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்த போது ஆதரவாளர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
'சிறிலங்கா பொதுஜன பெரமுன' கட்சியின் வடமாகாணத்திற்கான அமைப்பாளரும், வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான எஸ்.எம்.ரஞ்சித் சமரகோண் தலைமையில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் போது மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.டிலான், மன்னார் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சிலுவை பீரிஸ் ஆகியோரும் சென்றிருந்தனர்.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய 'சிறிலங்கா பொதுஜன பெரமுன' கட்சியின் முக்கியஸ்தர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்த போது ஆதரவாளர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட 'சிறிலங்கா பொதுஜன பெரமுன' கட்சி வேட்பு மனுத்தாக்கல் (படம்)
Reviewed by Author
on
December 20, 2017
Rating:
No comments:
Post a Comment