அகதிகளை அதிகளவில் நாட்டுக்குள் அனுமதிக்கும் பிரான்ஸ்: காரணம் என்ன? -
மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் ஆப்பரிக்க நாடுகளிலிருந்து 19 அகதிகள் பிரான்ஸுக்கு வந்திருக்கும் நிலையில் இன்னும் பலர் நாட்டுக்குள் அனுமதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூடானை சேர்ந்த 11 சிறார்கள் உட்பட 19 அகதிகள் சில தினங்களுக்கு முன்னர் பிரான்ஸுக்கு வந்தனர்.
இவர்கள் அனைவரும் அடுத்த நான்கு மாதங்களுக்கு கிழக்கில் உள்ள அல்சேஸ் பகுதியில் தங்க வைக்கப்படுவார்கள் எனவும் பின்னர் இடம் மாற்றப்படுவார்கள் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகாரி ஒருவர் கூறுகையில், அடுத்து நைஜரிலிருந்து 25 அகதிகள் பிரான்ஸுக்கு வரவுள்ளார்கள். இப்படியே அகதிகள் நாட்டுக்குள் தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.
நைஜர், சூடான், சட் போன்ற ஆப்பரிக்க நாடுகளிலிருந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் 3000 அகதிகளை அனுமதிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.
ஐ.நா. அகதி நிறுவனத்தால் வழங்கப்படும் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அகதிகள் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் ஐரோப்பாவில் குடியேற முடியும்.
இதனிடையில் பிரச்சனை அடிப்படையில், இந்தாண்டு 14 சதவீத அகதிகள் பிரான்ஸிலிருந்து கடந்தாண்டை விட அதிகமாக வெளியேற்றப்பட்டுள்ளார்கள் என உள்துறை அமைச்சர் ஜிரார்ட் கொலோம்ப் கூறியுள்ளார்.
அகதிகளை அதிகளவில் நாட்டுக்குள் அனுமதிக்கும் பிரான்ஸ்: காரணம் என்ன? -
Reviewed by Author
on
December 22, 2017
Rating:

No comments:
Post a Comment