நிம்மதியான தூக்கத்திற்கு உதவும் ரோபோ கண்டுபிடிப்பு -
உலகில் ஐந்தில் ஒருவர் இரவு தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் நெதர்லாந்தைச் சேர்ந்த Robot பொறியியல் மாணவர்கள், Robot ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
தலையணை போன்ற வடிவில் இருக்கும் இந்த Robot, தூக்கம் வராதவர்களுக்கு விரைவான, நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தை அளிக்க உதவும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த Robot-வை அருகில் வைத்து படுக்கும்போது, அதில் இருந்து வரும் சப்தம் நமக்கு தூக்கத்தை வரவழைக்கும். அதில் உள்ள ஒலிபெருக்கி வழியாக இதயத்துடிப்பு, மனதிற்கு அமைதியை தரும் இசை, மெல்லிசை மற்றும் அதில் நமக்கு பிடித்தவர்களின் குரலை பதிவேற்றம் செய்து வைக்கலாம்.
நாம் உறங்கும்போது அந்த இசையை கேட்கலாம், அதன் மூலமாக நம் மனது அமைதி நிலைக்கு செல்லும்.
பின்னர் நிம்மதியான உறக்கத்தை கொடுக்கும், நாம் தூங்கிய பிறகு அந்த இசை தானாக நின்றுவிடும் வகையில், இந்த Robot வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த Robot-யின் முக்கிய நோக்கமே, 2025ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் மக்களை நிம்மதியான தூக்கத்தினை பெற வைப்பதாகும் என கூறப்படுகிறது.
நிம்மதியான தூக்கத்திற்கு உதவும் ரோபோ கண்டுபிடிப்பு -
Reviewed by Author
on
December 30, 2017
Rating:

No comments:
Post a Comment