அண்மைய செய்திகள்

recent
-

துரையம்மா அன்பகமானது 50மாணவர்களுக்கு 2018ம் ஆண்டுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் கொடுப்பனவு

கல்விக்காக உள்வாங்கிய தெரிவு செய்யப்பட்ட மாணவமாணவிகளுக்கு 2018ம் ஆண்டுக்கான கொடுப்பனவு பாடசாலை கற்றல் உபகரணங்கள் 29-12-217 காலை 9-30 மணியளவில் திருக்கேதீஸ்வரம் பாப்பாமோட்டை துரையம்மா அன்பக வளாகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இவ்விகழ்வில் விருந்தினர்களாக…..
  • திரு.செ.கேதீஸ்வரன் செயலாளர் பிரதேச செயலகம் மாந்தைமேற்கு அவர்களும்
  • திருமதி. லூட்ஸ் மாலினி வெனிற்றன் வலையக்கல்விப்பணிப்பாளர் அவர்களுக்கு பதிலாக 
  • திரு.திருக்குமரன் கோட்டக்கல்விப்பணிப்பாளர் மடு வலையம்
  • சித்தவைத்திய கலாநிதி செ.லோகநாதன்
  • ஓய்வு நிலை கணக்காளர் செ.சிறில் குருஸ் இவர்களுடன்
அன்பகத்தின் தலைவர் உபதலைவர் செயலாளர் பொருலாளர் நிர்வாக உறுப்பினர்கள் பயனாளி மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வுகளாக விருந்தினர்களை மாலையணிவித்து வரவேற்றலும் மங்கள விளக்கேற்றலைத்தொடர்ந்து தேசியக்கொடியினை திரு.செ.கேதீஸ்வரன் செயலாளர் பிரதேச செயலகம் மாந்தைமேற்கு அவர்களும்; அன்பககொடியினை உபதலைவர் திரு.ராஜகோபால் அவர்களும் ஏற்றிவைக்க தமிழ்தாய் வாழ்த்திசையும் அத்துடன்

துரையம்மா அன்பகத்தினை நிறுவியவரும் கல்வியால் மாணவச்செல்வங்கள் இவ்வுலகை வெல்லவேண்டும் என்று ஒரே சிந்தனையுடன் முன்பள்ளி முதியோர் இல்லம் தொழில்பேட்டை அமைத்து செயலாற்றவேண்டும் என்ற பெரும் எண்ணம் கொண்டிருந்த அமரர் திரு.வே.மனுவேல்பிள்ளை(உதயன்) அவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

வரவேற்புரையினை திருமதி.பொ.றொவீனா அவர்களும் தலைமையுரையினை அமரர் திரு.வே.மனுவேல்பிள்ளை(உதயன்) அவர்களின் துணைவியார் ம.சகாயகலா அவர்கள் வழங்க தேவன்பிட்டி மாணவிகளால் பாடல் இசைக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து பயணாளிமாணவர்களுக்கு
  • மன்.தம்பனைக்குளம் அ.த.க பாடசாலை-05
  • மன்.ஆருங்கன் மகா வித்தியாலயம் -03
  • மன்.கட்டையடம்பன் அ.த.க பாடசாலை-15
  • மன்.தேவன்பிட்டி ஆரம்ப பாடசாலை-06
  • மன்.தேவன்பிட்டி றோ.க.த.க.பாடசாலை-15 முதல்கட்டமாகவும் பெறுமதியான பாடசாலைக்கற்றல் உபகரணங்கள் கலந்து கொண்ட விருந்தினர்களால் வழங்கியதோடு
இலுப்பக்கடவை பாடசாலை 22மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாகவும் வழங்கிவைக்கப்படவுள்ளது.

அன்றைய நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக இவ்வருடம் புலமைப்பரீட்சையில் 164 புள்ளிகள் பெற்ற எமது அமைப்பின் பயனாளி மாணவனும் மன்.தம்பனைக்குளம் அ.த.க பாடசாலை மாணவனுமாகிய க.லோஷன் அவர்களுக்கு அவரின் திறமைச்சித்தியைப்பாராட்டி வெற்றிச்சான்றிதழை மாணவனுக்கு திரு.செ.கேதீஸ்வரன் செயலாளர் பிரதேச செயலகம் மாந்தைமேற்கு அவர்கள் வழங்கி வைத்தார்.

விருந்தினர் உரையின் சாரம்சம்சமாக தற்போதைய சுழ்நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதார பிரச்சினையில் இருக்கின்றபோது இவ்வாறான அமைப்புக்கள் குறிப்பாகதுரையம்மா அன்பகமானது  மாணவர்களின் கல்விச்செயற்பாட்டிற்காக தமது பணத்தினையும் நேரத்தினையும் செலவு செய்து இவ்வாறான செயற்பாடுகளை முன்னின்று செய்வது பாராட்டுக்குரியதும் வாழ்த்துக்குரியதும்.

தலைவர் அமரர் திரு.வே.மனுவேல்பிள்ளை(உதயன்) மறைந்த பின்னும் அவரின் பணிகளை தொடர்ச்சியாக செய்துவரும் பணியாளர்கள் உறுப்பினர்களையும் பாராட்டவேண்டும் தொடரட்டும் பணிகள் மாணவர்களின் கல்விச்சேவை மலரட்டும்.
பயனாளி மாணவிகளின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

தொகுப்பு-வை.கஜேந்திரன்-

















































































துரையம்மா அன்பகமானது 50மாணவர்களுக்கு 2018ம் ஆண்டுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் கொடுப்பனவு Reviewed by Author on December 31, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.