அண்மைய செய்திகள்

recent
-

4வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமனிலையில் முடிந்தது


அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 327 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து துடுப்பாடிய இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 491 ஓட்டங்களை பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அலேஸ்டர் குக் ஆட்டமிழக்காது 244 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

இந்தநிலையில், அவுஸ்திரேலியா அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடி வந்தநிலையில், இன்றைய 5 வதும் இறுதியுமான நாள் நிறைவில், 4 விக்கட்டுக்களை இழந்து 263 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

முன்னதாக இடம்பெற்ற 3 போட்டிகளிலும் அவுஸ்திரேலியா அணி வெற்ற பெற்ற நிலையில் தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதி மற்றும் 5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஜனவரி 4ந்தேதி சிட்னி நகரில் நடைபெற உள்ளது.
4வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமனிலையில் முடிந்தது Reviewed by Author on December 31, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.