வவுனியா இ.போ.ச பேரூந்து நிலையத்தினுள் தனியார் பேரூந்து அடாவடியில் ; பொலிஸார் குவிப்பு
வவுனியா இ.போ.ச பஸ் நிலையத்தில் இருந்து வவுனியா தனியார் பஸ்கள் உள்ளூர் சேவைகளை முன்னெடுக்க சென்ற போது இ.போ.சபையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளது
வுனியாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து இரண்டு பஸ் சேவைகளும் சேவையில் ஈடுபடுமாறு முதலமைச்சரினால் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் நத்தார் மற்றும் பண்டிகைக்காலம் என்பதால் புதிய பஸ் நிலையத்தில் இருந்து முழுமையான சேவையை மேற்கொள்வதனை இரண்டு வாரங்களுக்கு பிற்போடுவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.எனினும் இதனை நடைமுறைப்படுத்துவதில் இ.போ.சபை தரப்பால் சில பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் இடைப்பட்ட காலப்பகுதியில் தனியார் பஸ்ஸின் உள்ளூர் சேவைகள் மட்டும் பழைய பஸ் நிலையத்தில் இருந்தும், தூர இடங்களுக்கான சேவைகள் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் செயற்படுத்துவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் அமைச்சின் சிரேஸ்ட செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரன் நேற்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று காலை வவுனியா இ.போ.ச பஸ் நிலையத்திற்கு தனியார் பஸ்கள் உள்ளூர் சேவைகளை முன்னெடுக்க சென்ற போது இ.போ.சபைசபையினருக்கும் தனியார் பேரூந்து ஊழியர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

வவுனியா இ.போ.ச பேரூந்து நிலையத்தினுள் தனியார் பேரூந்து அடாவடியில் ; பொலிஸார் குவிப்பு
Reviewed by Author
on
December 26, 2017
Rating:
Reviewed by Author
on
December 26, 2017
Rating:






No comments:
Post a Comment