ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு இன்னும் ரூ.2 கோடி தேவை: அமைச்சர் பாண்டியராஜன்
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைப்பதற்கு இன்னும் ரூ.2 கோடி தேவை என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு இன்னும் ரூ.2 கோடி தேவை: அமைச்சர் பாண்டியராஜன்
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:-
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைப்பதற்காக ரூ.40 கோடி தொகையை அந்த பல்கலைக்கழகத்துக்கு ஜூன் 30-ந் தேதிக்குள் கொடுக்க வேண்டும். இதற்காக ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் ரூ.10 கோடி தொகையை முதல்-அமைச்சர் அனுமதித்துள்ளார்.
மற்ற 6 செம்மொழி இருக்கைகளுக்கும் ஓரிரு தொழிலதிபர்கள் பணம் கொடுத்துள்ளனர். தமிழ் இருக்கைக்கு அந்த மாதிரி இல்லாமல் ஊர் கூடி தேர் இழுக்கும் விதமாக 36 நாடுகளில் இருந்து தமிழ் சமுதாயம் இதில் பங்கேற்றுள்ளனர்.
முதல்-அமைச்சர் அனுமதித்த ரூ.10 கோடிக்கு பிறகு அதிக தொகையாக கொங்கு பகுதியான கோவையில் இருந்து தமிழ் செம்மல் விருது பெற்ற கவிதாசன் ஒருங்கிணைப்பில் 20 பேர் முயற்சி எடுத்து ரூ.10.58 லட்சம் கொடுத்துள்ளனர். பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் போன்றவையும் பங்களிப்பு அளித்துள்ளனர்.
ரூ.40 கோடியில் ரூ.38 கோடி தற்போது நமக்கு கிடைத்துள்ளது. இன்னும் ரூ.2 கோடி மட்டுமே தேவைப்படுகிறது. மீதமுள்ள இரண்டு கோடியையும் தமிழக அரசே கொடுத்துவிட்டால் ஊர்கூடித் தேர் இழுக்கும் உந்துதல் இருக்காது. இன்னும் 3 வாரங்களுக்குள் இது நிறைவடையும் என்று நாங்கள் நம்புகிறோம்.
நாளை மறுநாள் (நாளை 19-ந் தேதி) அந்த பல்கலைக்கழகத்துக்கு நான் செல்ல இருக்கிறேன். அந்த திட்டம் சார்ந்த துறைத் தலைவரை சந்தித்து, எந்தவிதமான இருக்கைகளை உருவாக்கப் போகிறோம். ஆராய்ச்சியின் மையக்கரு என்ன என்பது பற்றி ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு இன்னும் ரூ.2 கோடி தேவை: அமைச்சர் பாண்டியராஜன்
Reviewed by Author
on
January 18, 2018
Rating:

No comments:
Post a Comment