ஷேன் வார்னேவை மிஞ்சிய சுழற்பந்து வீச்சாளர்: 8 விக்கெட்டுகள் எடுத்து அசத்தல்!
குயின்ஸ்டவுன் நகரில் U19 காலிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா, துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால், அவுஸ்திரேலிய வீரர்கள் ஒட்டங்களை எடுக்க தடுமாறினர்.
இதனால், 33.3 ஒவர்களிலேயே 127 ஒட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக சங்கா 58 ஒட்டங்கள் எடுத்தார்.
நியூசிலாந்து தரப்பில் பாம்பர், பென்னிங்டன், ஜாக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து, எளிதான இலக்கை நோக்கி விளையாட துவங்கிய இங்கிலாந்துக்கு, தொடக்கம் சிறப்பாக அமைந்தது.
முதல் விக்கெட்டுக்கு 8 ஒவர்களில் 47 ஒட்டங்கள் எடுத்தது. அதன் பிறகு, விக்கெட்டுகள் விழத் தொடங்கியது.
Leg Spinner லாயிட் போப்பின் அபாரமான பந்துவீச்சால், இங்கிலாந்து அணி சரிவுக்குள்ளானது. களம் கண்ட ஒவ்வொரு துடுப்பாட்ட வீரரும் சொற்ப ஒட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், 23.4 ஒவர்களில் 96 ஒட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, இங்கிலாந்து தோல்வியடைந்தது. அந்த அணியில், துவக்க ஆட்டக்காரர் பாண்டன் அதிகபட்சமாக 58 ஒட்டங்கள் எடுத்தார்.
அபாரமாக பந்து வீசிய போப், 9.4 ஒவர்கள் வீசி, 35 ஒட்டங்கள் மட்டுமே விட்டு கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
லாயிட் போப்பின் இந்த பந்துவீச்சு, U19 உலக கிண்ண வரலாற்றிலேயே மிகச் சிறந்த பந்துவீச்சாகும். இதற்கு முன்பு, அவுஸ்திரேலிய வீரர் ஜேஸன் ரால்ஸ்டன்,
பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக 15 ஒட்டங்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
ஷேன் வார்னேவை மிஞ்சிய சுழற்பந்து வீச்சாளர்: 8 விக்கெட்டுகள் எடுத்து அசத்தல்!
Reviewed by Author
on
January 24, 2018
Rating:
No comments:
Post a Comment