மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் நன்மையடைய வேண்டும்- வேட்பாளர் மனுவல் உதையச்சந்திரா-(படம்)
தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. ஆனால் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நன்மை பெற வேண்டும் என்பதற்காகவே இத்தேர்தலில் போட்டியிடுவதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக மன்னார் நகர சபை தேர்தலில் பள்ளிமுனை வட்டாரத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் பெண் வேட்பாளர் மனுவல் உதையச்சந்திரா தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(23) காலை 11 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.
-இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,,,
-மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் நன்மையடைய வேண்டிய நிலை உள்ளது.சுமார் 302 உறவுகள் உள்ளனர்.ஏனைய மாவட்டங்களுடன் சேர்ந்து 5 ஆயிரத்து உறவுகள் உள்ளனர்.
-அனைவரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளேன்.காணாமல் போனவர்கள் தொடர்பில் இடம் பெற்ற அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டிருந்தேன்.
-காணாமல் போனவர்களில் உறவுகளுக்கு எந்த வகையிலாவது உதவிகளை வழங்க வேண்டும்.நன்மை கிடைக்கும் என்று நம்புகின்றேன்.
-காணாமல் போனவர்களை மீட்டெடுத்து தர எங்களுக்காக போராட வேண்டும் என அனைவரிடமும் கோரிக்கை விடுக்கின்றேன். இக்கட்சித்தலைவரிடம் தொடர்ந்தும் காணாமல் போனவர்களை மீட்க போராட வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றேன்.
கடந்த வருடம் கார்த்திகை மாதம் 06 ஆம் திகதி காணாமல் போன உறவினர்களின் சங்கம் சார்பாக ஜனாதிபதியை சந்தித்த போது அவர் எங்களுக்கு தெரிவித்த ஒரே ஒரு வார்த்தை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இல்லை.
-இலங்கையில் அப்படியான உறவுகள் எங்கும் இல்லை.இரகசிய முகாம்களும் இங்கு இல்லை என தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கருத்தினால் அங்கு சென்ற அனைத்து அம்மாக்களும் செத்துப்போகும் நிலை ஏற்பட்டது.
காணாமல் போன உறவுகள் பாதுகாப்பாக எங்கேயே இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தோம்.
இந்த நிலையில் நாங்கள் என்ன செய்வது என தெரியாத நிலையில் இருந்த சந்தர்ப்பத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் வந்துள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
நான் பதவிக்காகவோ,அல்லது அரசியலில் ஈடுபடுவதற்காகவே நான் ஆசைப்பட்டு வரவில்லை.
எனது மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன்.எனது எதிர்பார்ப்பு நிச்சையம் நிறைவேறும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் நன்மையடைய வேண்டும்- வேட்பாளர் மனுவல் உதையச்சந்திரா-(படம்)
Reviewed by Author
on
January 24, 2018
Rating:
No comments:
Post a Comment