வவுனியா – மன்னார் வீதியில் பொலிஸார் குவிப்பு : பாதுகாப்பு நடவடிக்கைள் தீவிரம்
வவுனியா – மன்னார் வீதியில் பொலிஸார் குவிப்பு : பாதுகாப்பு நடவடிக்கைள் தீவிரம்
கிராமத்தை கட்டியெழுப்பும் அரசாங்கம் எனும் தொனிப்பொருளில் நாளை (31.01.2018) காலை 9.30 மணிக்கு வவுனியா கலைமகள் மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ள இந் நிலையில் அவரின் வருகையினையேட்டி பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலகத்திலிருந்து குருமன்காட்டுச் சந்தி வரையும் , வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திலிருந்து கலைமகள் மைதானம் வரையும் வீதிகளில் 100ற்கு மேற்பட்ட பொலிஸாரும், போக்குவரத்து பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இன்றைய தினம் (30.01.2018) கலைமகள் மைதானத்திற்கு அருகேயுள்ள வீடுகளில் உள்ளவர்களின் விபரங்கள் சிவில் உடையில் வந்த பொலிஸாரினால் பதியப்பட்டது.

வவுனியா – மன்னார் வீதியில் பொலிஸார் குவிப்பு : பாதுகாப்பு நடவடிக்கைள் தீவிரம்
Reviewed by Author
on
January 30, 2018
Rating:

No comments:
Post a Comment