அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு, கிழக்கு இணைப்பில் இந்திய அரசாங்கம் தலையிடாமை மிகப்பெரிய கேள்விக்குறியே -


வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் இந்திய அரசாங்கம் எதனால் தலையிடவில்லை என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் அண்மையில் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் தாரான்ஜித் சிங் சாந்து ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,

வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது இலங்கையின் உள்ளகப் பிரச்சினை. இருந்த போதிலும் இந்திய அரசாங்கத்திற்கு இந்த விடயம் தொடர்பில் தலையிட சந்தர்ப்பம் இருந்தது.
இருப்பினும் இந்திய அரசாங்கமானது இந்த விடயத்தில் எதனால் தலையிடவில்லை என்பது மிகப் பெரிய கேள்விக் குறி.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு, இந்திய அரசாங்கம் வழங்கும் அழுத்தம் போதாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான திட்டங்கள் தொடர்பிலான அறிக்கையொன்று வடக்கு முதல்வரால், இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு இணைப்பில் இந்திய அரசாங்கம் தலையிடாமை மிகப்பெரிய கேள்விக்குறியே - Reviewed by Author on January 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.