ஈழ ஆயுதப் போராட்டத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டது யார் தெரியுமா? -
ஆயுதப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்த நிலையில்தான் உலகம் தமிழ் மக்களை திரும்பி பார்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வன்னியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நேற்றைய தினம் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இலங்கையில் இனக்கலவரம் ஆரம்பித்த காலம் தொடக்கம் தமிழ் இளைஞர்கள் பல்வேறு இயக்கங்களில் சேர்ந்து ஆயுதம் தூக்கி போராடினார்கள்.
இளைஞர்கள் என்னைப் போல் பேச மாட்டார்கள் வேறொரு மொழியில் பேசுவார்கள் என தெரிவித்து ஆயுதப் போராட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் தந்தை செல்வா தான்.
அவர் போட்ட பிள்ளையார்சுழிதான் முப்பது வருட காலத்தில் ஆயுதப் போராட்டமாக உச்சகட்டத்தை அடைந்தது.
அப்போதுதான், உலகம் தமிழ் மக்களை திரும்பி பார்த்தது என்றும் கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டது, படுகொலைகள் நடைபெற்றது, இன அழிப்பு என்பன ஆயுதப்போராட்டத்தின் மூலமே உலகுக்கு உணர்த்தப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நீண்ட சகிப்புத்தன்மையுடன் இருந்தோம்.
மக்கள் எங்களுக்கு கொடுத்த ஆணையை ஏற்று கிட்டத்தட்ட பதினாறு வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு சர்வாதிகார தலைமையின் கீழ் நாங்கள் இருந்தோம்.
இலங்கை அரசு பேச்சு சுதந்திரம் மற்றும் எழுத்து சுதந்திரத்தை மறுத்திருந்தது. பல ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகளை கொலை செய்திருக்கிறார்கள்.
சிங்கள மக்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் சுதந்திரக்கட்சி ஆகிய இரண்டு தெரிவுகள் உள்ளன.
மாறி மாறி ஆட்சிக்கு கொண்டு வருவார்கள், அப்படிப்பட்ட ஒரு தெரிவு தமிழ் மக்களுக்கும் வேண்டும் அப்போதுதான் அரசியல்வாதிகள் அரசியல் கட்சிகள் தங்கள் தவறுகளை திருத்துவார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஈழ ஆயுதப் போராட்டத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டது யார் தெரியுமா? -
Reviewed by Author
on
January 08, 2018
Rating:

No comments:
Post a Comment