இதயத்தை பையில் சுமந்து கொண்டு உயிர் வாழும் பிரித்தானியா பெண்: எப்படி? -
நாட்டின் கிழக்கு லண்டனை சேர்ந்தவர் ஷெல்வா ஹுசைன் (39) இவருக்கு கடந்த யூலை மாதம் இதயம் செயலிழந்த நிலையில் ஹரிபீல்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஷெல்வாவின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அவரின் கணவர் ஆல் அனுமதியுடன் செயற்கை இதயம் வைக்க மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.
செயற்கை இதயம் உடலில் பொருத்தப்படவில்லை, ஷெல்வானின் உடலில் டியூப்கள் வைக்கப்பட்டு அதன் உதவியுடன் மின்சார பேட்டரிகள் பொருத்தப்பட்டு இதயம் ஒரு பையில் வைக்கப்பட்டுள்ளது.
அதிலிருந்து வரும் காற்று ஷெல்வாவில் மார்புக்கு சென்று அது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை செலுத்துகிறது.
இந்த முறையில் அவருக்கு 6 மணி நேர ஆப்ரேஷன் வெற்றிகரமாக நடத்தப்பட்டு தற்போதுச் ஷெல்வா நலமாக உள்ளார்.
அவர் கூறுகையில், என் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட உதவிய ஹரிபீல்ட் மருத்துவமனைக்கு நன்றி.
நான் உயிருடன் வாழ ஒரு தீர்வை உருவாக்கியது மிக சிறப்பான விடயமாகும் என கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் ஏற்கனவே கடந்த 2011-ல் 50 வயதான நபருக்கு இது போன்ற செயற்கை இதயம் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதயத்தை பையில் சுமந்து கொண்டு உயிர் வாழும் பிரித்தானியா பெண்: எப்படி? -
Reviewed by Author
on
January 01, 2018
Rating:

No comments:
Post a Comment