அண்மைய செய்திகள்

recent
-

ஒக்கி புயலால் மாயமான குமரி மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய பிரேமலதா


ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களின் குடும்பத்தினருக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமானார்கள். இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்னும் கரை திரும்பவில்லை. இதனால் மீனவ கிராமங்களில் சோகம் தீரவில்லை.

மாயமான மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா இன்று குமரி மாவட்டம் வந்தார். மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு காரில் வந்த அவர் நேராக கடற்கரை கிராமங்களுக்கு சென்றார்.

முதலில் கடியப்பட்டணம் கிராமத்தில் புயலில் மாயமான டெல்பின்ராஜ் என்பவரின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது மனைவிக்கு ஆறுதல் கூறினார். பிரேமலதாவை கண்டதும் டெல்பின்ராஜ் மனைவி கதறி அழுதார். அவரது கைகளை பிடித்து பிரேமலதா சிறிது நேரம் பேசி ஆறுதல் படுத்தினர்.

பின்னர் குளச்சலில் பலியான மீனவர் ஜஸ்டின் பாபுவின் வீட்டுக்கு சென்று அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதன்பின் குளச்சல் காணிக்கை மாதா ஆலய பங்குத்தந்தை எட்வினை சந்தித்து பிரேமலதா விவரங்களை கேட்டறிந்தார். அப்போது பங்குத்தந்தை எட்வின், பிரேமலதாவிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது, மீனவர்களை தேட விமான தளம் அமைப்பது உள்பட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தது.

அப்போது பிரேமலதா பேசும்போது உங்கள் கோரிக்கைகள் பற்றி விஜயகாந்திடம் தெரிவித்து அவர் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மக்களும் மாற வேண்டும். இந்த அரசும் மாற வேண்டும். எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் மீனவர்களுக்கு செய்து கொடுப்போம். வெளிநாடுகளில் இதுபோல் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஆளில்லாத விமானங்கள் பயன்படுத்தப்படுகிறது. நம்மிடம் அதுபோன்ற தொழில்நுட்பம் இல்லாதது ஒருகுறையாக உள்ளது என்றார்.

அதைத்தொடர்ந்து மாயமான மீனவர் ஜான்டேவிட்சன் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது புயல் பற்றி முன்கூட்டியே உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? என்று பிரேமலதா கேட்டார். அதற்கு பதில் அளித்த அவரது குடும்பத்தினர் அரசு முன்கூட்டியே எந்தவொரு தகவலும் கொடுக்கவில்லை. மாயமான மீனவர்களை தேடும் பணியிலும் அரசு மெத்தனம் காட்டியதாக சரமாரியான புகார்களை தெரிவித்தனர். மேலும் குமரி மாவட்டத்தை கேரளாவுடன் இணைக்க வேண்டும் என்றும் அவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

பின்னர் அவர் குளச்சல் பகுதியில் மாயமான மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் குமரி மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் சென்றனர்.


ஒக்கி புயலால் மாயமான குமரி மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய பிரேமலதா Reviewed by Author on January 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.