அண்மைய செய்திகள்

recent
-

ரஜினியின் காவலன் நான் - அரசியல் பிரவேசம் குறித்து லாரன்ஸ் 4-ஆம் தேதி அறிவிப்பு


ரஜினிகாந்தின் காவலனாக வருகிற 4-ஆம் தேதி தனது பயணத்தை தொடங்க இருப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்திருக்கிறார். #Rajinikanth #RajiniMandram


ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று பல ஆண்டுகளாக, ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில், 2017-ஆம் ஆண்டின் கடைசி நாளில் அதற்கான விடை கிடைத்தது.

ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளின் போது ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினிகாந்த், நான் அரசியலுக்கு வருவது உறுதி. விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என்றார். வருகிற சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் ரஜினி அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அரசியலில் மும்முரம் காட்டி வரும் ரஜினிகாந்த், ரஜினிமன்றம் என்ற பெயில் இணையதள பக்கத்தை தொடங்கினார். ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர் மன்றம் அல்லாத நல்லது செய்ய நினைக்கும் அனைவரும் ஆதரவி அளிக்கும்படி தெரிவித்திருந்தார். மேலும் அவரது ‘டுவிட்டர்’ பக்கத்தில், உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகத்துடன் ‘பாபா’ முத்திரையுடன் ரஜினி பேசும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. மேலும் ரசிகர் மன்றங்களை இணைக்கவும், ஆட்சேர்ப்பு பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரஜியின் இந்த தொடர் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். சினிமா துறையில் அவரது தீவர ரசிகனாக இருக்கும் நடிகர் ராகவா லாரன்சும் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறார். அதேநேரத்தில் அவர் அரசியலுக்கு வருவாறா என்ற கேள்விக்கு தான் 10 வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டதாகவும், அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்கள். நான் அரசியலுக்கு வராமலேயே நல்லது செய்கிறேன். மேலும் தனக்கு அரசியல் ஆசை இல்லை என்றும் தெரிவித்திருந்தார். ரஜினி இல்லையேல் நானில்லை என்றார்.

அரசியல் பிரவேசம் குறித்து லாரன்சிடம் கேட்ட போது, அவர் அரசியலில் ரஜினியின் தீவர தொண்டனாக, ஒரு காவலனாக தான் இருப்பேன் என்று கூறியிருக்கிறார். ஆவடியில் எனது தாய்க்கு கட்டிய கோவிலில் இருந்து வருகிற 4-ஆம் தேதி ரஜினியின் காவலனாக எனது பயணத்தை தொடங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். எனவே வருகிற 4-ஆம் தேதி லாரன்ஸ் தனது அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் காவலன் நான் - அரசியல் பிரவேசம் குறித்து லாரன்ஸ் 4-ஆம் தேதி அறிவிப்பு Reviewed by Author on January 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.