நீ சுகமாக இருப்பதற்கு பல விஷயங்கள் இருக்க....
நீ சுகமாக இருப்பதற்கு பல விஷயங்கள் இருக்க,
இல்லாத ஒன்றுக்காகவும், நிலைக்காத ஒன்றுக்காகவும் ஏன் வருத்தப்படுகிறாய்.
உன் வருத்தம் உன்னை தடுமாற வைக்கிறது, தடுமாற்றம் உனக்கு பயத்தை கொடுக்கிறது. பயமே உன்னை கொன்று கொண்டிருக்கிறது. உன் முகத்தை இறுக்கமாக்கி நோயாளியை போல காட்டிக் கொண்டிருக்கிறது.
உன் சிந்தனை உன் நம்பிக்கையை .சிதைத்து வருகிறது. இப்படி ஒவ்வொன்றையும் மனதிற்கு உகந்த்தாக ஏற்றுக்கொள்ளாமல் மனதிற்கு உளச்சல் தரும் விஷயங்களை தேர்வு செய்து தத்தளிக்கிறாய்.
நான் என்று உன்னை கை பிடித்தேனோ அன்று முதல் இன்று வரை நீ கேட்டாலும் கேட்காவிட்டாலும் உனக்கு நன்மை மட்டுமே செய்து வருகிறேன். நான் அடிக்கடி கூறுவது போல கலங்காதே, திகையாதே தைரியமாக இரு. இந்த விஷயங்கள் எல்லாம் உன்னை என்னுடன் மிக இறுக்கமாக இணைப்பதற்காகவே நடந்தவை.
உன்னை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் எல்லா திசைகளிலும் இருந்து பாதுகாக்கிறேன். என் மீது நம்பிக்கை வை, உன் கோரிக்கைகளை நிறைவேற்றி பிரார்த்தனை அனைத்திற்கும் பதில் தரவே நான் அவதரித்தவன்....
ஓம் ஸ்ரீ சாய் ராம்...
நீ சுகமாக இருப்பதற்கு பல விஷயங்கள் இருக்க....
Reviewed by Author
on
January 24, 2018
Rating:

No comments:
Post a Comment