முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஜிம்பாப்வேயிடம் தோல்வியடைந்த இலங்கை -
வங்கதேசத்தின் டாக்காவில் இலங்கை, வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடக்கிறது
இதன் முதல் லீக் போட்டியில் வங்கதேச அணி, ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியிருந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீல்டிங்கை தெரிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு, துவக்க வீரர் மசகாட்சா (73), சிக்கந்தர் ராசா (81) ஆகியோர் அரை சதம் அடித்து கைகொடுக்க அந்த அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 290 ஓட்டங்கள் குவித்தது.
இதையடுத்து தனது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரர் பெரேரா (80) நல்ல துவக்கம் அளித்தார். பின் வந்த மேத்யூஸ் (42), சண்டிமால் (34), பெரேரா (64) ஓரளவு கைகொடுத்தனர்.
இதையடுத்து இலங்கை அணி 48 ஓவரில் 278 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டை பறிகொடுத்தது.
இந்நிலையில் இலங்கை அணியின் வெற்றிக்கு 12 பந்தில் 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
49வது ஓவரின் முதல் பந்தை எதிர்க்கொண்ட சமீரா, சதாரா பந்தில் 1 ஓட்டத்தில் அவுட்டாக இலங்கை அணி 48.1 ஓவரில் 278 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டாகி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஜிம்பாப்வேயிடம் தோல்வியடைந்த இலங்கை -
Reviewed by Author
on
January 18, 2018
Rating:

No comments:
Post a Comment