அண்மைய செய்திகள்

recent
-

300 அடி ஆழத்தில் சரிந்து விபத்துக்குள்ளான பேருந்து: 44 பேர் உடல் நசுங்கி பலி -


பெரு நாட்டில் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 300 அடி ஆழத்தில் சரிந்து விழுந்ததில் 44 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
44 உயிர்களை பலிவாங்கிய குறித்த கொடூர சம்பவமானது Ocona பகுதியில் அமைந்துள்ள Panamericana Sur நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.
குறித்த நெடுஞ்சாலையின் ஆபத்தான வளைவு பகுதியில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. பேருந்து நசுங்கி சின்னாபின்னமாகியுள்ளதை வெளியான புகைப்படங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
விபத்து நடந்த பகுதில் அருகாமையில் ஆறு ஒன்று ஓடுவதால், உடல்கள் அந்த ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.




இதனிடையே மீட்பு குழுவினர் ஆற்றில் குதித்து உடல்களை மீட்டு கரை சேர்த்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
300 அடி ஆழத்தில் பேருந்து கவிழ்ந்துள்ளதால் உடல்களை மீட்டு மருத்துவமனை சேர்க்கும் பணி கடுமையாக உள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ள போதும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எச்சரித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்தில் 45 பேர் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் குறித்த பேருந்தில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் இருக்க வாட்ப்பு உண்டு என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் இதேப்போன்றதொரு பேருந்து விபத்தில் சிக்கி சுமார் 50 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



300 அடி ஆழத்தில் சரிந்து விபத்துக்குள்ளான பேருந்து: 44 பேர் உடல் நசுங்கி பலி - Reviewed by Author on February 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.