அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் தமிழர்களை மிரட்டிய பிரிகேடியர் பதவியை இழந்தார் -


பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் ராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை, உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அவருக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் 70ஆவது சுதந்திரத் தினத்தை புறக்கணித்து நேற்று முன்தினம் லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழ் மக்களை சைகை மூலம் அச்சுறுத்தும் காணொளி காட்சி சமூக வலைத்தளங்களிலும், இணைய ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த விடயம் தொடர்பில் தற்போது இலங்கை அதிகாரிகளின் கவனம் திரும்பியுள்ளது. அதற்கமைய இலங்கையிலுள்ள ராணுவம் உட்பட அதிகாரிகள் இந்த சம்பவம் தொர்பாக உடடியாக விசாரணை முன்னெடுப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தமிழர்களை மிரட்டிய பிரிகேடியர் பதவியை இழந்தார் - Reviewed by Author on February 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.