தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலமிருக்காது -
அந்த செய்தியில் மேலும், எதிர்வரும் 10ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் குறித்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரத்தைப் பெற்று கொள்ளக்கூடிய வகையிலான பலம் கிடைக்கப் பெறாது.
புதிய உள்ளூராட்சி மன்ற சட்டங்களின் அடிப்படையில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் 56 வீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுதிவாரி முறையில் இவ்வாறு பெரும்பான்மை பலத்தை எந்தவொரு கட்சியினாலும் பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியமிருக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் கட்சி மற்றுமொரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்தே ஆட்சி அமைக்கக்கூடிய சாத்தியம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே எதிர்வரும் தேர்தலின் பின்னர் உருவாகும் உள்ளூராட்சி மன்றங்களும் கூட்டணி ஆட்சியாகவே அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலமிருக்காது -
Reviewed by Author
on
February 03, 2018
Rating:

No comments:
Post a Comment