நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ சாப்பிட வேண்டிய உணவுகள் -
அவ்வாறான உணவுகளை இங்கு பார்க்கலாம்.
பசலைக்கீரை
பசலைக்கீரையில் ஆண்டி-ஆக்ஸிடண்டுகள், வைட்டமின்கள், இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை அதிக அளவில் உள்ளன.எனவே இதனை வாரத்திற்கு மூன்று முறையாவது சமைத்து சாப்பிட்டால், ரத்த அழுத்தம் சீராக இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் வலிமை பெறும்.
மேலும், இந்த கீரையில் லூடீன் உள்ளதால், அது கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
கேல் கீரை
இந்த கீரை, பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் அல்லது ஒன்லைனில் மட்டுமே கிடைக்கும். இதில் நார்ச்சத்து, வைட்டமின் பி6, கரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் அதிகம் உள்ளன. இதனை சிப்ஸ் செய்து சாப்பிட்டால், உடலில் கொழுப்புகள் சேராமல் இருக்கும்.கிரீன் டீ
அன்றாடம் டீ குடிக்கும் பழக்க உள்ளவர்கள், அதற்கு பதிலாக கிரீன் டீயை குடிக்கலாம். ஏனெனில், கிரீன் டீயில் ஆண்டி-ஆக்ஸிடண்ட்டுகளான, வைட்டமின் சி மற்றும் ஈ அதிக அளவில் நிறைந்துள்ளன.மேலும், இதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, வயதாகும் தன்மையையும் தள்ளிப் போடும். மேலும், அன்றாடம் கிரீன் டீ பருகி வருவதன் மூலம், புற்றுநோயின் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.
மீன்
மீனில் உள்ள புரோட்டீன், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் ஆகியவை உள்ளன. மேலும், மீனில் சால்மனில் புரோட்டீன், வைட்டமின் ஏ மற்றும் பி அதிக அளவில் உள்ளதால், நாள்பட்ட மூட்டு வலி மற்றும் ஞாபக மறதி போன்றவற்றிற்கு மீன் சிறந்த நிவாரணியாக இருக்கும்.பெர்ரி பழங்கள்
உடலில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்க, பெர்ரிப் பழங்களை உட்கொள்ள வேண்டும்.குறிப்பாக ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, நெல்லிக்காய், ப்ளாக்பெர்ரி ஆகியவற்றில் ஆண்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிக அளவில் நிறைந்துள்ளதால், இவை உடலுக்கு மிகவும் நல்லது.
தேங்காய்
தேங்காயில் ஏராளமான நன்மைகள் உள்ளன. தினமும் உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர், ஒரு தம்ளர் தேங்காய் பால் குடித்தால் உடல் வலிமை பெறும். தேங்காய் எண்ணெயைக் கொண்டு சமையல் செய்தால், இதயம் ஆரோக்கியம் பெறும்.தேங்காய் எண்ணெயில் ட்ரைகிளிசரைடு செயின் உள்ளது. இது மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். மேலும், இந்த எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தயிர்
தயிரில் புரோட்டீன், கால்சியம் நிறைந்திருப்பதால் எலும்புகளை வலிமை அடையச் செய்வதோடு, ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படாமல் தடுக்கும். மேலும், ரத்த அழுத்தத்தை சீராக்குவதோடு, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.டார்க் சொக்லேட்
வாழ்நாளின் அளவை அதிகரிப்பதில் Dark Chocolate-க்கும் பங்கு உண்டு. இதிலும் இதயம், மூளை போன்றவற்றை சீராக இயக்க உதவும் ஆண்டி-ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளன.மேலும், ரத்த உறைதல் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது போன்றவற்றையும் Dark Chocolate தடுக்கும். அவ்வப்போது இதனை சாப்பிட்டு வந்தால், முதுமைத் தோற்றத்தையும் தள்ளிப் போடலாம்.
நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ சாப்பிட வேண்டிய உணவுகள் -
Reviewed by Author
on
February 09, 2018
Rating:
No comments:
Post a Comment