கமல்ஹாசனுக்கு பெரிய பிரபலங்களிடமிருந்து வந்த ஆதரவுகள்! ரசிகர்கள் உற்சாகம்
நடிகர் கமல்ஹாசன் இன்று தன் அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். காலை முதலே இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகிவிட்டது. ரசிகர்களிடையே உற்சாகமும், மக்களிடையே ஆர்வமும் இருப்பதை காணமுடிந்தது.
பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வழக்கம் போல சில அரசியல் விமர்சனங்கள் எழுந்தாலும் கமல் தன் ஸ்டைலில் பதிலடி கொடுத்து வருகிறார்.
அவரின் அரசியல் பயணம் வெற்றியடைய கலாம் வழியை பின்பற்றி பல மரக்கன்றுகளை நட்டு சாதனை நடிகர் செய்து வரும் காமெடி நடிகர் விவேக் வாழ்த்தியுள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு போனில் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயு விஜயன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது பிரபல கிரிக்கெட் வீரரான அஸ்வின் இது குறித்து தனது கருத்தை ட்விட்டரில் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் நடிகர் தன் அரசியல் கட்சியை இன்று துவக்குகிறார்.
அரசியலில் பெரும் மாற்றம் வரும் என கூறியுள்ளார்.
கமல்ஹாசனுக்கு பெரிய பிரபலங்களிடமிருந்து வந்த ஆதரவுகள்! ரசிகர்கள் உற்சாகம்
Reviewed by Author
on
February 21, 2018
Rating:
Reviewed by Author
on
February 21, 2018
Rating:


No comments:
Post a Comment