குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தது: முதலிடத்தில் எந்த நாடு? -
2018ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவின் பியாங்சங் நகரில் கடந்த 8ம் திகதி தொடங்கியது, இதில் 93 நாடுகளை சேர்ந்த 2,952 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
ஊக்க மருந்து பயன்படுத்தியதன் காரணமாக தடை விதிக்கப்பட்ட ரஷ்யா வீரர்கள், தனிப்பட்ட போட்டியாளர்களாக களமிறங்கினர்.
இந்த போட்டியில் ஐஸ் ஆக்கி, பனிச்சறுக்கு, ஸ்கேட்டிங் உள்பட 15 வகையான விளையாட்டுகள் இருபாலருக்கும் நடத்தப்பட்டன.
இதில் நோர்வே அணி 14 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது.
அதைத்தொடர்ந்து ஜேர்மனி 14 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலம் என 31 பதக்கங்கள் வென்று இரண்டாவது இடம் பிடித்தது.
11 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களுடன் கனடா மூன்றாம் இடம் பிடித்தது, அமெரிக்கா நான்காவது இடத்தையும், நெதர்லாந்து ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, அனைத்து நாட்டு வீரர்களும் தங்கள் கொடியுடன் அணிவகுத்து சென்றனர்.
தொடக்க விழாவை போல இந்த முறையும் வடகொரியா மற்றும் தென்கொரியா வீரர்கள் கூட்டாக அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தது: முதலிடத்தில் எந்த நாடு? - 
![]() Reviewed by Author
        on 
        
February 27, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 27, 2018
 
        Rating: 
       
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment