சுவிட்சர்லாந்தில் இலங்கை அகதி அடித்து கொலை!! அதிர்ச்சியில் பொலிசார் -
சுவிட்சர்லாந்தில் இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் Ecublens VD பகுதியில் கடந்த புதன் கிழமை 19 வயது மதிக்கத்தக்க இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், 19 வயது மதிக்கத்தக்க இலங்கை அகதி புதன் கிழமை மாலை இறந்து கிடந்தார். அது குறித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி இந்த கொலையை செய்தது இலங்கையைச் சேர்ந்தவர் தான் எனவும் அவருக்கு வயது 47 எனவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் எப்படி நடந்தது, என்ன காரணம் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்று அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுவிட்சர்லாந்தில் இலங்கை அகதி அடித்து கொலை!! அதிர்ச்சியில் பொலிசார் -
Reviewed by Author
on
February 09, 2018
Rating:

No comments:
Post a Comment