வடக்கு - கிழக்கில் 79 உள்ளூராட்சி மன்றங்கள்! -
ஆயிரத்தி 379 கட்சி, 174 சுயேட்சைக்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். நான்கு பில்லியன் ரூபாய்கள் செலவிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தலில் சுமார் 13,000 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
வடக்கு கிழக்கில் 79 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இலங்கை முழுவதிலும் 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. அவற்றில் 24 மாநகராட்சிகள், 41 நகரசபைகள், 276 பிரதேச சபைகள் அடங்கியுள்ளன. 8,293 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதற்காக 71 ஆயிரத்திற்கும் அதிமான உறுப்பினர்கள் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
2015, 2017 ஆம் ஆண்டுகளில் திருத்தியமைக்க்ப்பட்ட புதிய தேர்தல் முறையின் மூலம் 60 விதமான உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 40 சதவீதமான உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஓவ்வொரு அரசியல் கட்சிகள் சுயேற்சைக்குழுவில் இருந்து 25 விதம் பெண்கள் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற திருத்தச் சட்டமூலம் ஒன்றை 2016ஆம் ஆண்டு பெப்பரவரியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தது.
25 வீத உறுப்பினர்களை தெரிவு செய்யும் அளவிற்கு பெண் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படவில்லையானால் தோல்வியடைந்த பெண் வேட்பாளர்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றவர்கள் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் அந்த சட்டமூலத்தில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளின் எல்லைகளை நிர்ணயிக்க ஜயலத் திசாநாயக்கா தலைமையில் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் நியமித்தது.
ஆனால் அந்தக்குழுவின் அறிக்கை 2015 யூன் மாதம் 19ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் பிரகாரம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 5,081 ஆக அதிகரிக்கப்பட்டது.
ஆனால் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள மீளாய்வுகள் தொடர்பாக ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இதனால் அசோக்கா பீரிஸ் தலைமையில் புதிய குழு ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார்.
இந்த குழுவின் அறிக்கை 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கைளிக்கப்பட்டது. பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வர்த்தமானியில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி சனிக்கிழமை உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுகின்றது.
93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் 2017 டிசம்பர் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன. 466 வேட்பு மனுக்கள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் இருந்தும், 57 மனுக்கள் சுயேட்சைக் குழுக்களிடமும் இருந்து மொத்தம் 523 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 500 மனுக்கள் 447 கட்சிகளில் இருந்தும், 53 சுயேட்சைக் குழுக்களிடமும் இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டன.
ஏனைய 248 சபைகளுக்கு வேட்பு மனுக்கள் 2017 டிசம்பர் 18 முதல் 21 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆயிரத்தி 399 கட்சிகளிடம் இருந்தும், 183 சுயேட்சைக் குழுக்களிடம் இருந்தும் மொத்தம் 1,582 வேட்பு மனுக்கள் கைளிக்கப்பட்டன.
இரண்டு பகுதியாக இடம்பெற்ற வேட்பு மனுத் தாக்கல்களிலும், ஆயிரத்தி 379 கட்சி, 174 சுயேட்சைக்கள் ஆகியவற்றிடம் இருந்து ஆயிரத்தி ,553 மனுக்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல் நடைபெறும்போது 300,000 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில் பாதுகாப்பு கடமைகளுக்காக மொத்தம் 65 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ள அதேவேளை, அவசர தேவைகளுக்காக மேலதிக ஆறாயிரத்தி 500 முப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறிப்பிட்ட சில வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட 855 இராணுவச் சிப்பாய்கள் தயார் நிலையில் உள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை தபால் மூல வாக்களிப்பு கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் 26 ஆம் திகதிகளில் நடைபெற்றன. இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகளை உள்ளடக்கிய, 79 உள்ளூராட்சி சபைகளுக்கும், வட்டார மற்றும் விகிதாசார முறையில்
தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை பின்வருமாறு;-
1. யாழ்ப்பாண மாவட்டம்
- யாழ்ப்பாண மாநகர சபை – 27 – 18
- பருத்தித்துறை நகர சபை – 09 – 06
- வல்வெட்டித்துறை நகர சபை – 09 – 06
- சாவகச்சேரி நகர சபை – 11 – 07
- தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச சபை – 08 – 05
- நெடுந்தீவு பிரதேச சபை -08 -05
- வேலணை பிரதேச சபை 12- 08
- வலி.மேற்கு பிரதேச சபை 15 – 10
- வலி.வடக்கு பிரதேச சபை – 21- 14
- வலி.தெற்குமேற்கு பிரதேச சபை – 17 – 11
- வலி.கிழக்கு பிரதேச சபை 22- 14
- வலி.தெற்கு பிரதேச சபை – 18 – 12
- பருத்தித்துறை பிரதேச சபை – 12 -08
- வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை – 19 – 12
- சாவகச்சேரி பிரதேச சபை – 17 -11
- நல்லூர் பிரதேச சபை -12 -08
- காரைநகர் பிரதேச சபை – 06- 04
2. கிளிநொச்சி மாவட்டம்
- பச்சிலைப்பள்ளி பிரதேச சபை – 08- 05
- கரைச்சி பிரதேச சபை -21 -14
- பூநகரி பிரதேச சபை – 11 – 07
3. மன்னார் மாவட்டம்
- மன்னார் நகரசபை – 09 – 06
- மன்னார் பிரதேச சபை -12- 08
- நானாட்டான் பிரதேச சபை – 10 – 06
- முசலி பிரதேச சபை -10 – 06
- மாந்தைமேற்கு பிரதேச சபை -13 – 08
4. வவுனியா மாவட்டம்
- வவுனியா நகரசபை – 12 – 08
- வவுனியா வடக்கு பிரதேச சபை -14 – 09
- வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை – 16 – 10
- வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை – 11 – 07
- வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை – 10 – 06
5.முல்லைத்தீவு மாவட்டம்
- மாந்தைகிழக்கு பிரதேச சபை – 08 – 05
- துணுக்காய் பிரதேச சபை – 08 – 05
- கரைத்துறைப்பற்று பிரதேச சபை – 13 – 08
- புதுக்குடியிருப்பு பிரதேச சபை -12 – 08
6. மட்டக்களப்பு மாவட்டம்
- மட்டக்களப்பு மாநகரசபை – 20 – 13
- காத்தான்குடி நகரசபை – 10 -06
- ஏறாவூர் நகரசபை – 10 – 06
- கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை – 11 – 07
- ஏறாவூர்பற்று பிரதேச சபை – 18- 12
- கோரளைப்பற்று பிரதேச சபை – 14 – 09
- கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை – 11 – 07
- மண்முனை தெற்கு எருவில்பற்று பிரதேச சபை – 12 – 08
- மண்முனை பிரதேச சபை – 10 – 06
- மண்முனை மேற்கு பிரதேச சபை – 10- 06
- மண்முனை தெற்கு மேற்கு பிரதேச சபை – 10- 06
- போரதீவுப்பற்று பிரதேச சபை – 10 – 06
7. அம்பாறை மாவட்டம்
- கல்முனை மாநகரசபை – 24 -16
- அக்கரைப்பற்று மாநகரசபை – 12 – 08
- அம்பாறை நகரசபை – 10 – 06
- தெகியத்தகண்டிய பிரதேச சபை – 23 – 15
- காரைதீவு பிரதேச சபை – 07 -04
- தமண பிரதேச சபை – 10 – 06
- நாவிதன்வெளி பிரதேச சபை – 08 – 05
- உகண பிரதேச சபை – 17 – 11
- மகாஓயா பிரதேச சபை – 16 – 07
- நாமல்ஓய பிரதேச சபை – 10 -06
- பதியத்தலாவ பிரதேச சபை – 12 – 08
- சம்மாந்துறை பிரதேச சபை – 12 – 08
- அக்கரைப்பற்று பிரதேச சபை – 05 – 03
- பொத்துவில் பிரதேச சபை – 12 – 08
- அட்டாளைச்சேனை பிரதேச சபை – 11- 07
- ஆலையடிவேம்பு பிரதேச சபை – 10 – 07
- லகுகல பிரதேச சபை – 11 – 07
- நிந்தவூர் பிரதேச சபை – 08 – 05
- திருக்கோவில் பிரதேச சபை – 10 – 06
- இறக்காமம் பிரதேச சபை – 08 – 05
8. திருகோணமலை மாவட்டம்
- திருகோணமலை நகரசபை – 14 – 09
- தம்பலகாமம் பிரதேச சபை – 10 – 06
- கிண்ணியா பிரதேச சபை – 08 – 05
- மூதூர் பிரதேச சபை 13 – 08
- குச்சவெளி பிரதேச சபை – 10 – 06
- திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபை – 12 – 08
- பதவிசிறீபுர பிரதேச சபை – 10 – 06
- கோமரங்கடவெல பிரதேச சபை – 10 – 06
- மொறவெவ பிரதேச சபை – 10 – 06
- கந்தளாய் பிரதேச சபை – 13 – 08
- சேருவில பிரதேச சபை – 10 – 06
- கிண்ணியா பிரதேச சபை – 08 – 05
- வெருகல் பிரதேச சபை – 08 – 05
வடக்கு - கிழக்கில் 79 உள்ளூராட்சி மன்றங்கள்! -
Reviewed by Author
on
February 09, 2018
Rating:

No comments:
Post a Comment