அண்மைய செய்திகள்

recent
-

லண்டன் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ அதிகாரியின் பரிதாப நிலை -


பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாடு திரும்பவுள்ளார்.
இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைய பிரியங்க நாடு திரும்பவுள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களின் கழுத்தை அறுத்து விடுவேன் என சமிக்ஞை காட்டியமையினால் பாரிய சர்ச்சைகளுக்கு அவர் முகம் கொடுக்க நேரிட்டது.
அன்றைய தினம் அவரது சேவை உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்ட போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை தடுத்தார்.
குறித்த இராணுவ அதிகாரி மரண அச்சுறுத்தல் விடுத்தார் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோன் ரயன், சிமோன் மெக்டெனோ மற்றும் போல் ஸ்கலி ஆகியோர் குற்றம் சுமத்தினர்.
எனினும் குறித்த இராணுவ அதிகாரி தவறு ஒன்றையும் செய்யவில்லை என பாதுகாப்பு லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவினால் குறிப்பிடப்பட்டது.

இந்த சம்பவம் ஓரளவு மூடி மறைக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் மீண்டும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பிரித்தானியா பொதுநலவாய சபை அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழர்களின் எதிர்ப்பின் பின்னர் பிரிகேடியர் பிரியங்க இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் மீள அழைக்கப்பட்டமைக்கான காரணம் மர்மமாகவே உள்ளது.
லண்டன் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ அதிகாரியின் பரிதாப நிலை - Reviewed by Author on February 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.