வவுனியா – நெடுங்கேணியில் மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் துப்பாக்கி, ரவைகள்.மீட்பு
வவுனியா – நெடுங்கேணியில் நேற்று இரவு போக்குவரத்து பொலிஸாரால் ரி 56 ரக துப்பாக்கியும், 611 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபரொருவரின் பையினை சோதனையிட்ட போது துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், நேற்று இரவு 7 மணியளவில் நெடுங்கேணி – மாறாயிலுப்பை, நாகதம்பிரான் கோவிலடியில் போக்குவரத்துப் பொலிஸார் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளொன்றை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபரிடமிருந்த ஒரு பையினுள் ரி 56 ரக துப்பாக்கியும், 611 ரவைகளும் காணப்பட்டுள்ளன. குளவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த சிவசம்பு ஜெயரதன் எனும் 45 வயதுடைய நபரிடமிருந்தே துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அந்த நபரின் வீடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நெடுங்கேணி பொலிஸாரால் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா – நெடுங்கேணியில் மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் துப்பாக்கி, ரவைகள்.மீட்பு
Reviewed by Author
on
February 17, 2018
Rating:

No comments:
Post a Comment